அம்பாறை மாவட்டத்தில்
கடமையாற்றும்
ஆசிரியர்களின் எண்ணிக்கையும்
அவர்களின் கல்வித் தகைமைகளும்
அம்பாறை மாவட்டத்தில் 8972 ஆசிரியர்கள் மாணவர்களின்
கல்வி போதனைகளுக்காக
நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என கல்வி
அமைச்சின் புள்ளி
விபரம் தெரிவிக்கின்றது.
இவர்களில்
5348 பேர்
பெண்களாகவும் 3624 பேர்
ஆண்களாகவும் உள்ளனர். தமிழ் மொழி மூலமாக 5626
ஆசிரியர்களும் சிங்கள மொழி
மூலமாக 3226 ஆசிரியர்களும் ஆங்கில மொழி மூலமாக 120 ஆசிரியர்களும் இவ்வாறு கடமை செய்து
கொண்டிருக்கிறார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் 47 ஆசிரியர்கள்( Released to a Office) ஏனைய
நடவடிக்கைகளுக்காக காரியாலயத்திற்கு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இம்மாவட்டத்தில் 02 பேர் M.Phil தரத்திலும்
95 பேர்
MA/M.Sc/M.Ed தரத்திலும் 3110 பேர் BA/B.Sc/ B.Ed தரத்திலும்
5410 பேர் G.C.E.
A/L தரத்திலும்
355பேர்
G.C.E.O/L தரத்திலும் உள்ளனர்.
அம்பாறை
மாவட்டத்தில் 1141 பேர்
21 – 30 வயதிலும் 3244 பேர் 31- 40 வயதிலும்
3130 பேர்
41 – 50 வயதிலும் 1072 பேர் 51 – 55 வயதிலும் 218 பேர் 56 – 57 வயதிலும் 167 பேர் 58 - 60 வயதிலும்
இருந்து கொண்டிருக்கின்றனர்.
இவர்களில்
358 பேர் அதிபர்களாகவும்
70 பேர் பதில் அதிபர்களாகவும் 132 பேர் பிரதி
அதிபர்களாகவும் 18 பேர் பதில் பிரதி அதிபர்களாகவும் 72 பேர் உதவி
அதிபர்களாகவும் 06 பேர் பதில் உதவி
அதிபர்களாகவும் 8316 பேர் ஆசிரியர்களாகவும் பாடசாலைகளில் கடமை செய்கின்றனர்.
இம்மாவட்டத்திலுள்ள மொத்த
ஆசிரியர்களில் 2706 பேர் பட்டதாரி ஆசிரியர்களாகவும்
6014 பேர் பயிற்றப்பட ஆசிரியர்களாகவும்
157 பேர் பயிற்சியற்ற ஆசிரியர்களாகவும் 95 பேர் பயிலுநர் ஆசிரியர்களாகவும்
இருந்து கொண்டிருக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் 31 (1AB) பாடசாலைகளும் 69 (1C) பாடசாலைகளும் 157 (Type 2) பாடசாலைகளும்
168 (Type 3) பாடசாலைகளும் என மொத்தமாக 425 பாடசாலைகள் உள்ளன. இதில் 10 தேசிய பாடசாலைகளும்
அடங்கும்.
இப்பாடசாலைகளில் 182 சிங்கள பாடசாலைகளாகவும் 151 முஸ்லிம் பாடசாலைகளாகவும்
92 தமிழ் பாடசாலைகளாகவும் உள்ளன
0 comments:
Post a Comment