வாழ்விடங்களை இழந்த முஸ்லிம்களுக்கான
நுரைச்சோலை வீட்டுத் திட்டம்
பாழடைந்து போகும் நிலை பாரீர்!
அம்பாறை
மாவட்டத்தில் கடந்த 2004 12.26 ஆம் திகதி தாக்கிய
(சுனாமி) பேரலையினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக அக்கரைப்பற்று நுரைச்சோலைப்
பிரதேசத்தில் உருவாக்கப்பட்டதுதான்,
நுரைச்சோலை வீட்டுத் திட்டம். சவூதி அரேபியாவின்
‘நன்கொடை நிதியம்’ இதற்காக, இலங்கை
நாணயப் பெறுமதியில்
சுமார் 552 மில்லியன்
ரூபா நிதியினை
வழங்கியது.
கிட்டத்தட்ட
40 ஏக்கர் காணியில்
500 வீடுகள், வைத்தியசாலை,
சந்தைக் கட்டடத்
தொகுதி, ஆண்
– பெண் பாடசாலைகள்,
விளையாட்டு மைதானம், பள்ளிவாசல் மற்றும் பஸ்
தரிப்பிடங்கள் என்று, அனைத்தும் உள்ளடங்கிய ஒரு
‘குட்டி நகரம்’தான் நுரைச்சோலை
வீட்டுத் திட்டம்
இன்று அந்த குட்டி
நகரம் காடு
பிடித்து, சேதமடைந்து,
விலங்குகளின் உறைவிடமாக மாறியிருக்கிறது. இந்த வீட்டுத் திட்டத்திலுள்ள கட்டிடங்களில் இருந்த
பெறுமதியான பொருட்கள் கூட களவாடப்பட்டுள்ளன.
அம்பாறை
மாவட்டத்தில் அபிவிருத்தி குழுத் தலைவராக பாராளுமன்ற
உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர்
நியமிக்கபட்டுள்ளார். இப்போது,
முஸ்லிம் நாடாளுமன்ற
உறுப்பினர்களென்று, முஸ்லிம் காங்கிரஸைச்
சேர்ந்த மூவர்
மட்டுமே இம்மாவட்டத்தில்
உள்ளனர். அவர்களில் இருவர் பிரதி அமைச்சர்கள். முஸ்லிம்
காங்கிரஸ் இப்போது
ஆளுந்தரப்பில்தான் உள்ளது. அதுமாத்திரமல்லாமல்,
அம்பாறை மாவட்ட
முஸ்லிம் மக்களின்
பெரும்பான்மை ஆதரவினைப் பெற்ற கட்சியாகவும் முஸ்லிம்
காங்கிரஸ் உள்ளது. இக்கட்சியின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் மத்திய
அரசில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களில் ஒருவராக உள்ளார்.
இந்நிலையில் இவ்விடயம் கவனிக்கப்படாதிருப்பது கவலைக்குரிய விடயம் என சமூக நலன் விரும்பிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மக்களின் அமோக ஆதரவைப் பெற்று தற்போது
அதிகாரத்தில் இருக்கும் அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகளே!
நுரைச்சோலை வீட்டுத் திட்டம் தொடர்பாக
தகுந்த நடவடிக்கைகளை சீக்கிரமாக எடுக்காமல் அடுத்த ஒரு தேர்தலில் மக்களை எந்த முகத்துடன்
சந்திக்கப் போகின்றீர்கள் என மக்கள் கேள்வியும்
எழுப்புகின்றனர்.
0 comments:
Post a Comment