அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்
சட்டப்படியற்ற, கள்ளத்தனமான பேராளர் மாநாட்டை
முடிந்தால் வடகிழக்கில் நடாத்த முடியுமா?
(எஸ்.அஷ்ரப்கான்,எம்.வை.
அமீர்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சட்டப்படியற்ற, கள்ளத்தனமான
பேராளர் மாநாட்டை முடிந்தால் வட கிழக்கில் நடாத்த முடியுமா என்ற சவாலை விடுக்கின்றேன்
என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு குருநாகல் மாவட்டத்தில்
நடாத்தப்படவுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது. உண்மையில் இந்த மாநாட்டு நடவடிக்கை என்பது ஒரு கள்ளத்தனமான தலைமைத்துவத்தினுடைய பொறுப்பற்ற
செயற்பாடையே இது காட்டுகின்றது. அரசியல் ரீதியில் கட்சியின் செயலாளர் நாயகத்திற்கு
தெரியாமல், அவர் இல்லாமல் நடாத்தப்பட இருக்கின்ற ஒரு பேராளர் மாநாடு சில வேளை இதுதான்
முதற் தடவையாக இருக்கும். என்று தெரிவித்த சுபைர் மேலும் இது பற்றி குறிப்பிடும்போது,
கட்சிக்காக வியர்வை சிந்தி, இரத்தம் சிந்தி இரவு பகலாக பாடுபட்ட
போராளிகளை புறம்தள்ளி, மக்கள் சக்தி கொண்ட கட்சியின் பேராளர் மாநாட்டை அதிகப்படியான
மக்கள் ஆதரவுள்ள ஒரு பிரதேசத்தில் நடத்தாமல் மறைமுகமாக நடாத்த தீர்மானித்ததன் மர்மம்தான்
என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது.
உண்மையில் இந்த மாநாட்டு எற்பாடுகள் தொடர்பாக கட்சியின் ஆரம்பகால
போராளிகள் உயர்பீட உறுப்பினர்கள் பெரும்பாலானோருக்கு தெரியாமல் நடாத்தப்படுவது மிகவும்
வேதனையளிக்கின்றது. இதனால் கட்சியின் ஆரம்பகால போராளிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வட கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
போராளிகளுக்கே தெரியாமல் இந்த மாநாடு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இது கட்சியா அல்லது
விளையாட்டு நோக்கமாகக் கொண்ட கழகமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது.
இந்த மாநாட்டின் மூலம் அப்பாவி குருநாகல் மாவட்ட முஸ்லிம்களை
ஏமாற்ற எடுக்கப்பட்ட முயற்சியே. வட மாகாண அப்பாவி முஸ்லிம்களையும், அப்பாவி மேல் மாகாண
முஸ்லிம்களையும் அதுபோல் ஊவா மாகாண முஸ்லிம்களையும் போன்று இன்று குருநாகல் மாவட்ட
முஸ்லிம்கள் ஏமாற்றப்படப் போகின்றார்கள். மிக விரைவில் இந்த கட்சியின் நம்பகத் தன்மையற்ற
தலைவருடைய கள்ளத்தனமான செயற்பாடுகள் பற்றி கட்சியினுடைய செயலாளரோடு தொடர்பு கொண்டு
கட்சிக்காக வித்திட்ட எனது உயிருக்கு உயிரான போராளிகள் ஆநேகமானவர்கள் வடக்கிலும், கிழக்கிலும்
இருக்கின்றார்கள். அவர்களுக்கு இந்த அ.இ.ம.கா. கட்சியின் தலைமையின் சட்டவிரோதமான செயற்பாடுகள்
தொடர்பாக தெளிவுபடுத்தி, கட்சியின் ஆக்கத்திற்கு முதற் காரண கர்த்தாக்களில் ஒருவரான
செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட், கட்சி போராளிகளுக்கும், உயர்பீட உறுப்பினர்களுக்கும்
தெரியப்படுத்தப்படாமல் சிறுபிள்ளைத்தனமாக சட்ட விரோதமாக கூட்டப்படவுள்ள இந்த மாநாடு
தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு கட்சியின் பெரும்பான்மை பலத்தோடு களமிறங்குவோம்
என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதோடு, இதனையிட்டு கட்சி போராளிகள் மனம் தளரத்
தேவையில்லை. இந்த விடயம் தொடர்பாக கடும் சட்ட நடவடிக்கை விரைவில் எடுக்க கட்சியின்
செயலாளர் நாயகத்துடன் இணைந்து நாம் போராடுவோம். எனவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.