கல்முனையின் முதல் தவிசாளர்
ஐ.ஏ.ஹமீட் காலமானார்
கல்முனை
பிரதேச சபையாக இருந்தபோது அதன் முதல் தவிசாளரும் .பொறியியலாளருமான
மருதமுனைனையைச் சேர்ந்த ஐ.ஏ.ஹமீட்
(வயது 71)இன்று
(03-01-2016) காலை மட்டக்களப்பு வைத்தியசாலையில்
காலமானார்
1945ஆம் ஆண்டு ஜூலை மாதம்
17ஆம் திகதி
மருதமுனையில் பிறந் இவர் உயர்
கல்வியை மொறட்டுவ
பல்கலைக்கழகத்திலும்,நாவல இலங்கை
திறந்த பல்கலைக்கழகத்திலும்
கற்று சமூக
விஞ்ஞான பட்டதாரியாக
பட்டம் பெற்று
வெளியேறினார்.இலங்கை தொலைத் தொடர்பு சபையில்
கடமையாற்றி பின்னர் அபுதாபியிலும் கடமையாற்றினார்
1994ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் கட்சியில்
இணைந்து பிரதேச
சபைத் தேர்தலில்
போட்டியிட்டு கல்முனைப் பிரதேசத்தில் அதிகூடிய வாக்குகளைப்
பெற்று கல்முனை
பிரதேச சபையின்
முதலாவது தவிசாளராக
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்;.எம்.அஷ்ரப் அவர்களினால்
நியமிக்கப்பட்டார்.
அதன்
பின்னர் 2004ஆம் ஆண்டு அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய
காங்கிரஸில் இணைந்து அக்கட்சியின் செயலாளர் நாயகமாகவும்
பணியாற்றினார்.அப்போது புணர்வாழ்வு அதிகார சபையின்
தலைவராகவும்,உள்ளுர் ஆளுகை நிறுவகத்தின் பணிப்பாளராகவும்
பிரதம நிறைவேற்றுப்
பணிப்பாளராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றிருந்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களினால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நேர்மையான அரசியல்வாதியே பொறியியலாளர் ஐ.ஏ.ஹமீட் என கல்முனை மாநகர முதல்வரும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் அன்னாரின் மறைவையொட்டி
வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
.
0 comments:
Post a Comment