நுகேகொடபகுதியில் முஸ்லிம் வீடுகளில்
” சிங்க லே” என்று
எழுதப்பட்ட வாசகங்கள்
இனங்களுக்கு
இடையில் பேதங்களை
உருவாக்க முற்படுவோரை
சட்டத்தின் முன் நிறுத்தி, தொடர்ந்தும் அவ்வாறான
நடவடிக்கைகளை முன்னெடுக்க இடமளிக்காதிருக்க
வேண்டும் என,
பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ
டி சில்வா
தெரிவித்துள்ளார்.
தனது
பேஸ்புக் பக்கத்தில்
முன்வைத்துள்ள பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு கருத்து
வெளியிட்டுள்ளார்.
அண்மையில்
இனம்தெரியாத சிலர் நுகேகொடை பகுதியிலுள்ள மூன்று
முஸ்லிம் வீடுகளின்
முன்னாலுள்ள வாயில் கதவுகள் (கேட்) மற்றும்
சுவர்களில் “சிங்ஹ லே” என
எழுதப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம்
தொடர்பிலேயே அவர் தனது கருத்தை இவ்வாறு
பதிவிட்டுள்ளார்.
இது
குறித்து ஆராய
பொறுப்புள்ள அதிகாரிகளை அந்தப் பகுதிக்கு அனுப்ப
நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்
அவர் மேலும்
சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோன்ற
செயற்பாடுகள் மக்களுக்கு இடையிலான ஒற்றுமையை பாதிக்கும்
எனவும் ஹர்ஷ
டி சில்வா
மேலும் தெரிவித்துள்ளார்.
I am still out of town but I sent
my staff and the local member of the council to visit the owners of the three
Muslim homes whose walls and gates were vandalised by the 'Singha Le' group in
Nugegoda. I conveyed to them that this kind of racist behaviour will not be
tolerated in my electorate where all communities live in harmony. We will work
with the authorities to apprehend those who did this to create racial tensions
and have a more broadbased plan to prevent such ugly incidents in the future. I
invite all to work with me to achieve the objective of creating a 'Sri Lankan'
identity to unite us instead of ethnic identities that are dividing us
-
Harsha de Silva ( Politician)
0 comments:
Post a Comment