சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பிரிவில் தெரிவு செய்யப்பட்டுள்ள
பிரதி அமைச்சர் ஹரீஸ் பாடசாலைகளுக்கு திடீர் விஜயம்
(எஸ்.அஷ்ரப்கான்)
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.
ஹரீஸின் அயராத
முயற்சியினால் "அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" எனும் தேசிய
வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது
கோட்டக்கல்விப் பிரிவில் தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு
பிரதி அமைச்சர்
ஹரீஸ் இன்று
7 ஆம் திகதி வியாழக்கிழமை திடீர்
விஜயமொன்றை மேற்கொண்டார்.
கமு/ அல்-ஜலால் வித்தியாலயம்,
கமு/ லீடர்
எம்.எச்.எம்.அஸ்ரப்
வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் வேலைத்திட்டங்களை பார்வையிடும் பொருட்டே பிரதி அமைச்சர்
எச்.எம்.எம். ஹரீஸ் இத்திடீர்
விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
பிரதி அமைச்சர்
ஹரீஸ்
இவ்விஜயத்தின் போது பாடசாலைகளின் அபிவிருத்தி சம்மந்தமான
கலந்துரையாடல்களை நடாத்தியதுடன் இரு பாடசாலை
அதிபர்களிடமும் திட்ட வரைபுகள், வளப்பற்றாக்குறை, இதர பாடசாலைத் தேவைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார். சில அறிவுறுத்தல்களையும் அதிபர்களுக்கு வழங்கினார்.
இப்பாடசாலைகளின் அபிவிருத்தி வேலைகள் மிகவிரைவில் பூர்த்தி செய்வதற்காக கல்வி அமைச்சின்
"அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை"
எனும் தேசிய
வேலைத்திட்டத்தின் கீழ் பூர்வாங்க
ஏற்பாடுகளை தான் மேற்கொண்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் ஹரீஸ் இங்கு குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment