லிபியாவில் பொலிஸ் பயிற்சி முகாமில் குண்டு வெடிப்பு

60 பேர் பலி 200 க்கும் மேற்பட்டோர் காயம்

மேற்கு லிபியாவில் பொலிஸ் பயிற்சி முகாம் ஒன்றில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும்200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும்    தகவல் வெளியாகி உள்ளது.
லிபியாவின் லானா தேசிய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், 15 பேர் உயிரிழந்ததாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் லிபியா அரசு தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் எதிர்தரப்பு செய்தி நிறுவனங்கள் மற்றும் அரப் நியூஸ் தகவலின்படி இந்த தாக்குதலில் 60  பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும்  200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும்  செய்திகள் கூறுகின்றன

வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்ற பொலிஸ் பயிற்சி மையத்தில் 400-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வந்தனர். இந்த தாக்குதலை அடுத்து லிபியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. லிபியாவிற்கான .நா தூதர் மார்டின் கோப்லர் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தீவிரவாதத்திற்கு எதிராக லிபிய மக்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top