தைவான் நாட்டின்
முதல் பெண் ஜனாதிபதி சய்-யிங்வென்
தைவானில் நேற்று 16 ஆம்
திகதி சனிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக முன்னேற்றக் கட்சி அமோக முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக சய்-யிங்வென் Tsai Ing-wen ( வயது59) தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் கடந்த எட்டு ஆண்டுகளாக தைவானில் நடந்து வந்த சீன ஆதரவு ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சீனாவை ஆளும் குவோமின்டாங் கட்சி, சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டது. தற்போதைய ஜனாதிபதி மா யிங்-ஜியோவின் ஆட்சிக் காலத்தில், சீனாவுடனான உறவு மேம்படுத்தப்பட்டது.இந்தச் சூழலில், அந்த நாட்டுக்கான ஜனாதிபதி தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தேர்தலில், சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட ஜனநாயக முன்னேற்றக் கட்சிக்கு அதிக ஆதரவு காணப்பட்டது.
அந்தக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி பதவிக்கு பெண் வேட்பாளர் சய்-யிங்வென் போட்டியிட்டார்.
நாட்டின் 1.8 கோடி வாக்காளர்களில் பெரும்பாலானோர் மாற்றத்தை விரும்புவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.
இந்தச் சூழலில், சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக முன்னேற்றக் கட்சி முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தக் கட்சி 60 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும், ஆளும் குவோமின்டாங் கட்சி 30 சதவீத வாக்குகளுடன் பின்தங்கியுள்ளதாகவும் வாக்கு எண்ணிக்கை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, ஆளும் கட்சி சார்பில் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட எரிக் சூ, தோல்வியை ஏற்பதாக அறிவித்தார்.
தைத் தொடர்ந்து, தைவானின் புதிய ஜனாதிபதியாக சய்-யிங்வென் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. தைவானில் பொறுப்பேற்கவிருக்கும் முதல் பெண் ஜனாதிபதி சய்-யிங்வென் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment