றிஷாத் பதியுதீன் - வை.எல்.எஸ்.ஹமீட் பிளவு!
கடைசி நேர கனிவான வேண்டுகோள்!!
(இப்னு தீன்)
எமக்கு
முன்பு எத்தனையோ
மனிதர்களினதும் சம்பங்களினதும் வரலாறுகள் பதியப்பட்டு விட்டன.
மனித வரலாறுகள்
எங்கோ ஒரு
மூலையில் எம்மை
படிக்கமாட்டார்களா என ஏங்கிக்
கிடக்கின்றன. சில மனிதர்கள் இந்த உலகில்
வாழ்ந்ததற்கான எந்தவித தடயங்களும் இல்லாமலே அழிந்து
விட்டனர். காற்றில்
அடிபட்டுச் செல்லும் குப்பைகள் போல.
நாம்
நேரில் கண்டிராத
நாம் ஒரு
வினாடி கூட
பேசிப் பழகிடாத
சில விடயங்களை,
சில மனிதர்களை
நாம் எம்மை
அறியாமல் நியாபகப்
படு;த்திப்
பேசுகிறோம். அந்த மனிதர்கள் எமக்கு எந்த
வகையிலும் உறவேதுமில்லை.
இருந்தும் அவர்கள்
தொடர்பான வாசிப்பு
எமக்கு ஒரு
வகையான உணர்வினை
, மகிழ்ச்சி மேலீட்டை நாமும் இப்படி இருக்கலாமே
என்ற முன்னுதாரணத்தை
ஏற்படு;த்திவிடுகின்றது.
குறித்த
இவ்வாறனவர்களையோ அல்லது குறித்த விடயங்களின் மகழ்ச்சிப்
பெருக்கத்தையோ நாம் மகிழ்ச்சியுடன் உணர்ந்து கொள்வதற்கான
அனுபவக் கதவினை
திறந்துவைத்த அந்த விடயம் யாரோ ஒருவரினால் பதியப்பட்ட
நல்ல வரலாறாகத்தான்
இருக்க முடியும்.
எனினும்
இவைகளைக்
கடந்து, சில நிகழ்வுகள், எம்மிடையே ஏற்படும்
பிளவுகள் மற்றும்
முரண்பாடான அனுபவங்கள் என்பன அடுத்த சந்ததிக்குரிய
படிப்பினையாகவும் பதியப்பட்டுள்ளன.
இவ்வாறான
விடயங்களை எதிர்கொள்ளும்
சந்ததியினர் நமது முன்னோர்களின் அனுபவங்களை நாம்
எதிர்நோக்கும் குறித்த பிரச்சினைக்கு தீர்வைக்காண பிரயோகிக்க
முயாதவர்களாக தம்மை சுற்றியிருக்கும் சுயநல அரசியல்
சிந்தனை கொண்டவர்களின்
தூண்டலினால் அனைத்து வரலாற்று அனுபவங்களையும் கழிவிறக்கம்
செய்துவிடுகின்றோம். அதைத்தான் இப்போதும்
செய்து கொண்டிருக்கின்றோம்
என்ற உண்மையை
பதிவு செய்து
விடயத்திற்கு வருகின்றேன்.
பூதாகரமாக மாற்றப்பட்டுள்ள ரிசாத்- வை.எல்.எஸ். உறவு
தற்போது
இந்த நிமிடம்
வரை இலங்கை
முஸ்லிம்களினதும் முஸ்லிம் தலைமைகளினதும் பேசுபொருளாக மாறியுள்ள
அல்லது மாற்றப்பட்டுள்ள
விடயமாக அமைச்சர்
ரிசாத் – வை.எல்.எஸ்
ஹமீட் விவகாரம்
உள்ளது.
இருவருக்கிடையில் படர்ந்துள்ள மனக்கசப்பினை
பூதாகரமாக தலைவர்
– செயலாளர் முரண்பாடாக சிலரினால் மாற்றப்பட்டுள்ளது.
அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸ் கட்சி
இன்று மக்கள்
மயப்பட்டுள்ளது. இதற்கு தலைவர் – செயலாளர் தொடக்கம்
அக்கட்சியின் அடிமட்டத் தொண்டன் வரை ஏதோ
ஒருவகையில் தன்னால் இயலுமான முயற்சிகளை செய்திருப்பார்கள்
என்பதே நிதர்சணமான உண்மை.
முஸ்லிம்
சமுகத்தின் எதிர்பார்ப்புகள், அரசியல் முன்னகர்வுகளின் கனதி
போதாமை, சிறந்த
தலைமைத்துவ வழிநடத்தல் போன்ற காரணிகளினால் இன்று
மக்கள் மயப்பட்டுப்போயுள்ள
அ.இ.ம.காவுக்குள்
தலைவர் – செயலாளர்
முரண்பாடானது ஏதோ ஒருவகையில் தோன்றவில்லை. அது
திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாகவே இருக்க
வேண்டும்.
முஸ்லிம்
அரசியல் தலைமைகள்
தலைவர் – செயலாளர்
என்ற சிந்தனைகளுக்கு
அப்பால் சிந்திப்பதற்கும்
தீர்ப்பதற்கும் எண்ணிலடங்கா பிரச்சினைகளை முஸ்லி;ம்
சமுகம் எதிர்நோக்கி
வருகின்றது. இவ்வாறான பிரச்சினைகளுடன் சம அந்தஸ்தில்
உள்ளதாகவே முஸ்லிம்
அரசியல் தலைமைகளிடம்
ஏற்படும் பிளவுகளையும்
பார்க்க வேண்டியுள்ளது.
காலத்திற்கு
காலம் திட்டமிட்டு
உருவாக்கப்படும் பிளவுகள் முஸ்லிம் சமுகத்தின் வளர்ச்சியை
பின்னோக்கி நகர்த்துவதாகவே அமைந்து விடுகின்றது. அது
ஒற்றுமையற்ற சந்ததியை உருவாக்குதற்கான அரசியல் தந்திரோபாயகமாகவே
நாம் பார்க்க
வேண்டியுள்ளது.
அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸில் தலைவராகவும் – செயலாளராவும்
பதவியைச் சுமந்துள்ள
நீங்கள் இருவரும்
சமுக அபிவிருத்தி
தொடர்பில் நல்லெண்ணம்
கொண்டவர்கள். இருவரும் ஐவேளையை விடாமல் தொழக்கூடியவர்கள்.
சமுகப் பிரச்சினைகளில்
முன்னிற்கக் கூடியவர்கள், இவைகளைக் கடந்து நீங்கள்
நல்ல நண்பர்களும்
கூட.
இப்படியான
இறுக்கமான பிணைப்பைக்
கொண்டிருந்த நீங்கள் இருவரும் இன்று பிரிந்து
மனக்கசப்புடன் தனித்தனியாக நிற்கின்றனர். அ.இ.ம.கா என்ற கட்சியை
பெற்றுக்கொள்வதற்காக உங்களால் இயன்ற
பலத்தை பிரயோகித்தும்
வருகிறீர்கள்.
இரு தரப்பினராலும் அடுக்கப்படும் காரணங்கள்!
நீங்கள்
மேடைகளில் பேசும்;
அடுத்த எதிர்கால
சந்ததியாக இருக்கும்
நான் உங்களிடம்
கேட்கின்றேன் நீங்கள் இருவரும் பிரிவதற்கு எடுக்கும்
எத்தனங்களை ஏன் ஒன்றிணைவதற்கு எடுக்கமுடியாமல் உள்ளது.
இதற்கு தடையாக
இருப்பது எது?
தடையாக இருப்பவர்கள்
யார்? என்று
ஒரு நிமிடம்
ஏன் உங்களை
நீங்கள் கேட்டுக்கொள்ளக்
கூடாது?
பிடிவாதத்தை தள்ளி வையுங்கள்!
அருமையான
நண்பர்களாக இருந்த நீங்கள் பிடிவாதத்தை ஒரு
நிமிடம் தள்ளிவைத்து
விட்டு ஏன்
நியாயமாக அமர்ந்து
யோசிக்க முடியாமல்
உள்ளது?உங்கள்
இருவரது பிரிவு
சமுக வழிநடத்தல்
வேண்டி அலையும்
முஸ்லிம் சமுகத்தின்
அடையாளத்தை எவ்வளவு தூரம் காயப்படுத்தியுள்ளது என்பதனை யோசியுங்கள்.நீங்கள் இருவரும்
இந்த நிமிடம்
வரை நல்ல
நண்பராகவே உங்களை
அறியாமல் பயணித்து
வருகிறீர்கள்.
தலைவரைப்
பற்றி செயலாளரோ
செயலாளரைப் பற்றி தலைவரோ பகிரங்கமாக தூற்றிக்கொள்ளவில்லை
என்பது ஈமானும்
இஸ்லாமியப் பண்பாடும் இன்னும் உங்களை விட்டு
உதிரவில்லை என்பதையே தெளிவுபடுத்துகின்றது.
நீங்கள்
நட்ட விதை
இன்று காய்க்கும்
பருவத்தில் உள்ளது. அதன் மேல் நீங்களே
கல்லெறிந்து பூக்களை உதிர்த்து விடாதீர்கள். கண்ணாடி
வீட்டுக்குள்ளிருந்து கல்லெறிந்தால் சேதம்
யாருக்கு?
ஒரு கூட்டம் அலைமோதுகின்றது!
இக்
கொள்கை வகுப்பாளர்களினால்
திரைமறைவில் உருவாக்கப்பட்டுள்ள இப்போட்டியில்
யார் வென்றாலும்
தோல்வி என்பது
இருவருக்குமானதே. இதனை உங்கள் இருவரது மனச்சாட்களிடம்
கேட்டுப்பாருங்கள்
தலைவர்
பக்கம் கட்சி
சென்றாலும் செயலாளர் பக்கம் கட்சி சென்றாலும்
வெற்றி என்பது
உங்கள் இருவரில்
ஒருவருக்கும் அல்ல. அந்த வெற்றிக் களிப்பை
எங்கோ திரை
மறைவில் இயக்கும்
யாரோ அனுபவிக்கப்பபோகின்றார்கள்.
முஸ்லிம்கள்
மத்தியில் பேசுபொருளாக
மாறியுள்ள அ.இ.ம.கா தலைவர்
உயர்பீட பலத்தின்
மூலம் கட்சியை
தன்வசப்படுத்தினால்; செயலாளரின்
அரசியல் நிலைப்பாடு என்ன? இவரின் மீள்
அரசியல் பிரவேசம்
என்பது மீண்டும்
பூச்சியத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.
ஏன்
செயலாளரிடம் கட்சி செல்வதற்கான நிகழ்வு தகவும்
இருக்கின்றது அல்லவா? அவ்வாறு செயலாளர் கட்சியைக்
கைப்பற்றிக் கொண்டால் அக்கட்சியின் யாப்பை மாற்றி
நீங்கள் ஒரு
அரசியல் கட்சியின்
தலைவராகலாம். சில நாட்களுக்கு தலைமை அணியினரின்
கட்சி
அரசியலின் வீச்சைக் குறைக்கலாம் என்பததைக் கடந்து
உங்களால் எவ்வாறான
மேலெழுச்சியை இப்போட்டி அரசியலில் நிலை நிறுத்த
முடியும்?
உங்களோடு
இருப்பவர்கள், தற்போதுள்ள தலைவருக்கு எதிராக இருப்பவர்கள்
எல்லோரும் ஒன்றிணைந்து
இப்போட்டி அரசியலில்
அறிக்கை விடுவதற்குரிய
ஊடமாக இக்
கட்சியையும் சின்னத்தையும் பயன்படுத்திக்
கொள்ளலாமே ஒழிய
வேறு எதனை
உங்களால் சாதித்து
விட முடியும்?
உங்களது
வெற்றியால் கட்சியைப் பறிகொடுத்த தலைவர் அணியினரின்;
அரசியற் செயற்பாடு
உங்களால் முடக்கப்பட்டு
விடும் என்று
நீங்கள் நம்புவீர்களாக
இருந்தால் நீங்களே
இச்சமுகத்தின் கடைசி முட்டாளாக இருக்கப்போகின்றீர்கள்.
இந்த
மனக்கசப்பை பயன்படுத்தி யார் யாரோ காய்நகர்த்துகின்றார்கள்.
இது தான்
யதார்த்தம். அண்ணன் எப்போது சாவான் தின்னை
எ;ப்போது
காலியாகும் என சுயநல அரசியல் சிந்தனை
கொண்டவவர்கள் வெளியில் இருப்பதை விட உங்களுடனே இருக்கின்றார்கள்.
இவர்களே உங்கள்
இருவருக்குமான மனக்கசப்பை பிரச்சினையாக மாற்றியவர்கள்.
நீங்கள்
இருவரும் உங்களிடம்
இருப்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள் தலைவருடன் இணைவோமா?
செயலாளருடன் இணைவோமா என்று. அப்போது நீங்கள்
உணர்ந்து கொள்வீர்கள்
ஒற்றுமையை எதிர்க்கும்
கறுப்பாடுகள் யார் யார் என்பதை.
ஓற்றுமைக்கு
எதிராக இருப்பது
எது யார்
என்பதை எதிரிகள்
தங்களது வாசிக்கேற்ப
குற்ற சுமத்திக்
கொள்கின்றார்கள் என்பதை
அப்போது புரிந்து
கொள்வீர்கள்
இவ்வாறான
சுயநல எண்ணம்
கொண்டவர்களினதும் வெளியிலிருந்து உங்களை பிரிக்க செயற்படும் கொள்கை
வகுப்பாளர்களின் உள்ளார்ந்த நகர்வுளினால் உங்கள் உறவில்
விரிசல் ஏற்பட்டுள்ளதை
முதலில் நீங்கள்
உணர வேண்டும்.
கட்சியைப்
பிரிப்பதற்கும் பதவிகளைப் பறிப்பதற்கும் நீங்கள் அடித்துக்
கொள்கின்றீர்கள். ஆனால் உங்களை மோதவைப்பவர்கள் நீங்கள்
கட்சிக்காக செய்த தியாகங்களை விசாரித்துக் கொண்டிருப்பiதில்லை.
உங்களை
சூழ்ந்துள்ள ஒற்றுமையை விரும்பாத சுயநலக் கருத்துக்களினால் உங்கள்
இருவருக்கிடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட போது
உங்களது தவறுகளை
நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.
ஒருவரை ஒருவர்
எதிரியாக – போட்டியளாராக நீங்கள் பார்க்கவில்லை என்பதானது
மீண்டும் நீங்கள்
நண்பர்களாக இணைவதற்குரிய பிணைப்பை இன்னும் உங்களிடமிருந்து
இறைவன் பிரிக்க்வில்லை
என்பதையே தெளிவு
படுத்துகின்றது.
உங்கள்
இருவருக்குமிடையில் தோற்றுவிக்கப்பட்டுள்ள இந்த மனக்கசப்பிலிருந்து உங்களுடன் இருப்பவர்களில்
யார்? ஒற்றுமையை
விரும்புவர்கள் யார்? பிளவினையை விரும்புவர்கள் என்பதினை
நீங்கள் அறிவதற்குரிய
சூழலை இறைவன்
சில காலப்
பிரிவின் மூலம்
ஏற்படுத்தியுள்ளான்.
இதனை
சிந்தித்து ஏன் நீங்கள்; மனம்விட்டுப்
பேச முனையக்கூடாது?
ஏன் தங்களது
மனக்கசப்பை மறந்து சுயநலவாதிகளுக்கும் எதிரிகளுக்கும் நல்ல
பாடம் புகட்டக்
கூடாது?
எங்கு தொடங்குவது? யார் தொடங்குவது என்பதை
விட சமுக
ஒற்றுமை பற்றி
அதிகம் சிந்திக்கும்
ஒருவர் முதலில்
தொடங்குங்கள். இது அடிபணிவில்லை. ஈமான் கொண்டோரின்
வழிமுறை இதுவாகத்தான்
இருக்கும். அவ்வாறான இதயபூர்வமான பேச்சுவார்த்தை தொடங்குமாக
இருந்தால் சமுக
ஒற்றுமைக்கான சிந்தனையும், எதிர்காலம் பேசக்கூடிய
வரலாற்றுப்பதிவும் உயிர் வடிவம் பெறுவதை
முஸ்லிம் சமுகம்
கண்ணூடாக அப்போது
பார்க்கும். முஸ்லிம் சமுகமும் இதைத்தான் விரும்புகின்றது.
முஸ்லிம்
அரசியலில் புரையோடிப்
போயுள்ள பிளவுகளிலிருந்து
பகுத்தறிந்து இதயசுத்திக்கும் இறையச்சத்திற்கும்
பயந்து செயற்பட்டவர்களின்
அரசியல் வரலாறே
எமக்கு இன்று
சாட்சியாக நிற்கின்றது
என்பதை நீங்கள்
மறந்து விடக்கூடாது.
இறுதியாக ஒன்றை ஞாபகப்படுத்துகிறேன்.
நீங்கள்
இருவரும் ஒவ்வொருவரிடமுள்ள
தலைவர் – செயலாளர்
என்ற அடையாளத்தை
உதறவிட அல்லது
பறித்து விட
முயற்சி எடுப்பீர்கள்
என்றால் இலங்கை
முஸ்லிம் அரசியல்
வரலாற்றில் பிளவு பட்டுப்போயுள்ள முஸ்லிம்
அரசியல்வாதிகள் என்ற பாரம்பரிய
சகுதிக்குள் புதைந்து உங்களது கண்ணியவான்
அரசியலை நீங்களே
கொலை செய்து
கொள்வதற்கான ஆரம்ப அடியயை எடுத்துவைத்துள்ளீர்கள் என்பதை ஞாபகப்படுத்துகின்றேன்.
0 comments:
Post a Comment