ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ஹக்கீமுக்கும் ஹசனலிக்கும் இடையில் தொடரும் முரண்பாடு
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின்
தலைவர் ரவூப்
ஹக்கீமுக்கும் அதன் செயலாளர் ஹசனலிக்கும் இடையில் முரண்பாடுகள் தொடருகின்றன என
அறிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப்
ஹக்கீம் தன்னிச்சையாக
முடிவுகளை மேற்கொள்வதாக
ஹசனலி குற்றம்
சுமத்திவருகின்றார் எனவும்
தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியுடன்
ஆராயாது ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின்
தலைவர் ரவூப்
ஹக்கீம், அரசியல்
உயர்பீடத்தில் சில மாற்றங்களை செய்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில்
தாம் கட்சியில்
இருந்து விலகப்
போவதில்லை என்று
குறிப்பிட்டுள்ள ஹசனலி, தலைமைத்துவ நடவடிக்கைகளுக்கு எதிராக போராடப் போவதாகவும் எச்சரித்துள்ளார் என்றும்
அறிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே
கடந்த மார்ச்சில்
பாலமுனையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
மாநாட்டிலும் ஹசனலி பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment