வங்காளதேசத்தில் 16 வயது இளம் கிரிக்கெட் வீரர்
ஸ்டெம்பால் தாக்கப்பட்டு கொலை!
வங்காளதேசத்தில் இளம் கிரிக்கெட் வீரர் ஸ்டெம்பால் தாக்கப்பட்டு
கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வங்காளதேசம் டாக்காக நகரில் உள்ளூரில் கிரிக்கெட் போட்டி நடத்தினர். அப்போது இரு அணியினர் விளையாடி கொண்டு இருந்தனர். ஒரு அணியின் சார்பில் பாபுல் ஷைக்தர் என்ற (Sixteen-year-old Babul Shikdar) 16 வயது சிறுவன் விக்கேட் கீப்பராக இருந்தார்.
அப்போது பந்து வீசியவர் நோபால் வீசியது குறித்து அம்பயருடன் பேசிகொண்டு இருந்தார். இதனால் கோபம் அடைந்த பேட்ஸ்மேன் அங்கிருந்த ஸ்டெம்பை பிடுங்கி ஷைக்தர் தலையில் தாக்கினார். இதில் ஷைக்தர் அதே இடத்தில் இரத்த வெளளத்தில் சரிந்தார். உடனடியாக உடன் இருந்த சிறுவர்கள் ஷைக்தரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் ஆனால் போகும் வழியிலேயே ஷைக்தர் உயிர் பிரிந்தது.
இது குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து ஷைக்தரை கொலை செய்த சிறுவனை தேடி வருகிறார்கள் என அறிவிக்கப்படுகின்றது



0 comments:
Post a Comment