லண்டன் மேயராக முஸ்லிம் தெரிவு செய்யப்பட்ட பின்
டொனால்டு டிரம்ப் பேச்சில் மாற்றம்
அமெரிக்காவில்
குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில்
போட்டியிட பல
மாதங்களுக்கு முன் பிரச்சாரத்தை தொடங்கிய டொனால்டு
டிரம்ப் முஸ்லிம்களுக்கு
எதிரான தனது
சர்ச்சைக்குரிய பேச்சு மூலம் பிரபலமானார். நான்
அமெரிக்காவின் அதிபரானால் குறிப்பிட்ட காலத்திற்கு முஸ்லிம்களை
அமெரிக்காவிற்குள் அனுமதிக்கமாட்டேன் என்று கூறியிருந்தார்.
ஆனால்
சில நாட்களுக்கு
முன் லண்டன்
மேயராக பாகிஸ்தானை
பூர்விகமாகக் கொண்ட சாதிக் கான் என்ற
ஒரு முஸ்லிம்
தெரிவு
செய்யப்பட்டதை அடுத்து முஸ்லிம் தொடர்பான டிரம்பின்
நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம்
அமெரிக்கா வருவதற்கு
லண்டன் மேயருக்கு
மட்டும் விதிவிலக்கு
அளிக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் அதை
லண்டன் மேயர்
சாதிக் நிராகரித்துவிட்டார்.
இந்நிலையில்
பாக்ஸ் செய்தி
நிறுவனத்திற்கு டொனால்ட் டிரம்ப் அளித்துள்ள பேட்டியில்
“நான் சொல்வது
ஒரு தற்காலிக
தடையை பற்றி
தான். இது
குறித்து எந்த
முடிவும் எடுக்கப்படவில்லை.
இது போல்
வேறு யாரும்
செய்தது இல்லை.
இது ஒரு
சாதாரண பரிந்துரை
மட்டும் தான்.
உண்மையில் என்ன
நடக்கிறது என்பதை
கண்டுப்பிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
‘இது
உலகம் முழுவதும்
நிலவும் பிரச்சனை.
இது பற்றி
ஆராய ஒரு
ஆணையத்தை அமைப்பது
பற்றி யோசித்து
வருகிறேன்’ என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment