கல்முனை நகர அபிவிருத்தி பற்றி தெரியாதாம்!
மேடையில் வைத்து ரவுப் ஹக்கீம் எழுதி தந்ததை வாசித்தேன்
ஹக்கீமும் ,ஹரீஸும் சாய்ந்தமருதுக்கு எதிரிகள் என்றும்
அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜெமீல் குற்றச்சாட்டு
சாய்ந்தமருதுக்கு
கிடைக்கவுள்ள உள்ளூராட்சி மன்றத்தை தடுப்பவர்கள் ஹக்கீமும்,
ஹரீஸும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின்
தலைவர் ஏ.எம்.ஜெமீல்
நேற்று
சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடை பெற்ற
மருதின் விழுதுகள்
பெரு விழாவில்
பிரதம அதிதியாக
கலந்து கொண்டு
உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜெமீல் மேலும் தெரிவிக்கையில்,
எனது
நெருக்கமான நண்பர் உள்ளூராட்சி அமைச்சர் பைசர்
முஸ்தபா அவரை
நானும் அமைச்சர்
றிஷாத் பதியுதீனும்
சந்தித்து சாய்ந்தமருது
நகர சபை
தொடர்பாக கதைத்த
போதே அவர்தான்
இவர்கள் இருவரும்
தடுக்கின்றனர் என கூறியுள்ளார்
அது
மட்டுமன்றி நானும் அமைச்சரும் பிரதமரை சந்தித்து
கல்முனை நகர
அபிவிருத்தி தொடர்பாக நீங்கள் கல்முனையில் தேர்தல்
பிரச்சாரத்தின் போது மக்களுக்கு வாக்குறுதி வழங்கினீர்கள்
இன்னும் அது
நடை பெறவில்லை
என கேட்ட
போது எனக்கு
அதைப் பற்றி
தெரியாது மேடையில்
வைத்து ரவுப்
ஹக்கீம் எழுதி
தந்ததை வாசித்தேன்
என்று தெரிவித்ததாகவும்
ஜெமீல் அங்கு
குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment