லண்டனில் இடம்பெறும்
”ஊழலுக்கெதிரான சர்வதேச மாநாடு – 2016”
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
கலந்துகொள்கின்றார்.
பிரித்தானியாவில்
இடம்பெறும் ”ஊழலுக்கெதிரான சர்வதேச மாநாடு – 2016” இல்
கலந்துகொள்வதற்காக நேற்று (11) முற்பகல்
நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
அவர்கள், லண்டன்
ஹீத்ரோ (Heathrow) விமான நிலையம்
சென்றடைந்தார்.
ஜனாதிபதி
அவர்கள் உள்ளிட்ட
தூதுக்குழுவினரை பிரித்தானிய மகா ராணியின் விசேட
பிரதிநிதியான பிரதி லெப்டினன்ட் புரூஸ் ஹோல்டர்
(Bruce Holder) அவர்கள், வெளிநாட்டு மற்றும்
பொதுநலவாய அலுவல்கள்
தொடர்பான இராஜாங்க
அமைச்சின் விசேட
பிரதிநிதி திருமதி
கெத்ரின் கொல்வின்
(Kathryn Colvin) உள்ளிட்ட பிரிவினர் ஆரவாரமாக
வரவேற்றனர்.
பிரித்தானிய
பிரதமர் டேவிட்
கெமரன் அவர்களின்
தலைமையில் ஊழலுக்கெதிரான
சர்வதேச மாநாடு
ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் மாநாட்டின் ஆரம்ப தினத்தில்
ஜனாதிபதி கௌரவ
மைத்ரிபால சிறிசேன
அவர்கள் உரையாற்ற
உள்ளமை விசேட
அம்சமாகும்.





0 comments:
Post a Comment