மே 23ம் திகதி திங்கட்கிழமை
வங்கி விடுமுறை தினம்!
அரச ஊழியர்களுக்கு இல்லை!!
வெசாக் போயா தினம் எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்
கிழமை வருவதன் காரணமாக அடுத்த நாள் 23ம் திகதி திங்கட்கிழமையை வங்கிகளுக்கு
(Special Bank Holdiday (in lieu of May 22nd)
விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது
இதேவேளை,எதிர்வரும் 23ம் திகதி திங்கட்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது இல்லை என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வெசக் போய தினத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமையும் அரச ஊழியர்களுக்கு விடுமுறையொன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் பரீசீலனை செய்திருந்தது.
எனினும் தற்போது எதிர்பாராத வகையில் ஏற்பட்டுள்ள இயற்கைச் சீற்றம் காரணமான அனர்த்த காலநிலையைக் கருத்திற்கொண்டு திங்கட்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் முடிவை அரசாங்கம் ரத்துச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அசாதாரண காலநிலைச் சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பணிகளை முன்னெடுக்கும் வகையில் இந்த முடிவை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment