சீரற்ற காலநிலை காரணமாக
தபால் விநியோகம் சீர்குலைவு!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தபால் திணைக்களத்தின் பணிகள் பெரும்பாலும் சீர்குலைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கொட்டும் கடும் மழை, வெள்ளம் காரணமாக அப்பகுதிகளில் விநியோகிக்க வேண்டிய தபால் பொதிகள் மற்றும் கடிதங்கள் தற்போது தபால் திணைக்களத்தின் தலைமையகத்தில் தேங்கத் தொடங்கியுள்ளன.
நேற்று மாலை வரை சுமார் ஐந்து லட்சம் கடிதங்களும் பொதிகளும் தேங்கியிருப்பதாக தபால் திணைக்களத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இவற்றில் சாதாரண தபால் பொதிகள் மட்டுமன்றி பதிவுத் தபால் பொதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலநிலை சீரற்ற தன்மை காரணமாக தபால் புகையிரதங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளமையும் தபால் விநியோகம் சீர்குலைவதற்கான ஒரு காரணமாக கூறப்படுகின்றது.

0 comments:
Post a Comment