சவூதி அரேபியாவில் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட
நபர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
சவூதி அரேபியாவில் கொலைக் குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை மருந்து கடத்தல் உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட Mohsen
al-Dosari என்ற நபருக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் இவ்வாண்டு மட்டும் 92 பேருக்கு இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 158 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment