70 வயதில் குழந்தை பெற்றெடுத்த இந்திய மூதாட்டி
இந்தியாவின்
ஹரியானா மாநிலத்தில் 70 வயது மூதாட்டி ஒருவர்
அழகிய குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த
தம்பதி மொஹிந்தர் சிங் கில்(வயது
79), தல்ஜிந்தர் கௌர்(வயது 70).
இவர்களுக்கு
கடந்த 46 ஆண்டுகளாக குழந்தை இல்லை, இதனால்
சோதனை குழாய் மூலம் குழந்தை
பெற்றெடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக
ஹிஸாரை சேர்ந்த தேசிய கருத்தரிப்பு
மற்றும் சோதனை குழாய் மையத்தை
தொடர்பு கொண்டுள்ளனர்.
கடந்த
2 ஆண்டுகளுக்கு முன்பு சிகிச்சை எடுத்துக்
கொண்டதில் தற்போது அழகான குழந்தை
பிறந்துள்ளது.
இதுகுறித்து
தேசிய கருத்தரிப்பு மையத்தின் தலைவர் மருத்துவர் அனுராக்
பிஷ்ணோய் கூறுகையில், எங்களது இரு முயற்சிகள்
தோல்வியடைந்தன, மூன்றாவது முயற்சி வெற்றியடைந்ததில் அழகான
ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும்,
சேயும் நலமாக உள்ளனர் என்று
தெரிவித்துள்ளார்.
தல்ஜிந்தர்
கௌர் கூறுகையில், நான் இந்த வயதில்
கருத்தரிக்க முடியாது என ஒருபோதும் நினைக்கவில்லை.
ஒரு குழந்தையை சுமக்ககூடிய பலம் இருக்கிறது என
தீர்க்கமாக நம்பினேன்.
கடவுள்
எங்களது பிரார்த்தனையை நிறைவேற்றிவிட்டார், என் வாழ்க்கை முழுமையாகி
விட்டதாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


0 comments:
Post a Comment