சட்டவிரோத ஆயுதங்களை தேடும்
நடவடிக்கைகள் ஆரம்பம்
தேவை ஏற்பட்டால் பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்பை
பெற்றுக் கொள்ளுமாறும் ஆலோசனை
சட்டவிரோதமான
முறையில் வைத்திருக்கும் ஆயுதங்களை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான
முறையில் ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றை மீள ஒப்படைப்பதற்கு
அரசாங்கம் பொது மன்னிப்பு காலத்தை
அறிவித்திருந்தது.
இந்த
பொதுமன்னிப்பு காலம் நிறைவடைந்துள்ள நிலையில்,
நாடு முழுவதிலும் பொலிஸார் விசேட தேடுதல் வேட்டைகளை
ஆரம்பித்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள் மீட்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்திடம்
ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் முப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத
ஆயுதங்களை மீட்கும் பணிகள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவித்துள்ளார்.
இந்த
தேடுதல் வேட்டையின் போது தேவை ஏற்பட்டால்
பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமன்னிப்புக்
காலத்தில் 464 ஆயுதங்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment