தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கை
நடுநிலையாக சிந்திக்கும் சகோதரர்களுக்கு
கல்முனைப் பிரதேசத்தில் அன்று கல்முனை பட்டினாட்சி
மன்றம், கரைவாகு தெற்கு கிராமாட்சி மன்றம் (சாய்ந்தமருது), கரைவாகு மேற்கு கிராமாட்சி மன்றம் (நற்பிட்டிமுனை), கரைவாகு வடக்கு கிராமாட்சி மன்றம் (மருதமுனை) என நான்கு உள்ளுராட்சி சபைகள் இருந்தன.
ஆனால், இந்த 4 சபைகளும் கல்முனை மாநகர சபையாக இன்று செயல்படுகின்றது.
ஏற்கனவே கல்முனைப் பிரதேசத்தில் உள்ளூராட்சி சபைகள் தனியாக செயல்பட்டது
போன்று ஏற்படுதப்படல் வேண்டும் எனக் கோரிக்கை விடுப்பவர்கள் முன் வைக்கும் பிரதான காரணிகளில்
கிழக்கு மாகாண சபையால் வழங்கப்பட்டுள்ள காபட்
வீதி பகிர்வு முக்கியமானது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியில் கிழக்கு மாகாண சபையால் அமைக்கப்படவுள்ள 600 கி.மீ காபட் வீதிகள் திட்டத்தின்
கீழ் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி மன்ற பிரதேசங்களுக்கும் 175 கி.மீ
காபட் வீதிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஒவ்வொரு உள்ளூராட்சி சபைக்கும் அதாவது ஒவ்வொரு ஊருக்கும் குறைந்தது ஏழு கிலோமீட்டர் காபட் வீதி கிடைத்துள்ளது.
கல்முனை மாநகர சபைக்கு அதாவது கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மருதமுனை, பாண்டிருப்பு,
நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, இஸ்லாமாபாத் ஆகிய பிரதேசங்களுக்கு 8.5 கிலோமீட்டர் காபட் வீதி கிடைத்துள்ளது? அதனை எவ்வாறு பங்கிடுவது? இது நடுநிலையாக
சிந்திக்கும் சகோதரர்களுக்கு.......
அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி மன்ற பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள 175 கி.மீ காபட் வீதிகள் விபரம்:
இது உள்ளக வீதிகள் மாத்திரம்..
01. காரைதீவு பிரதேச சபை -
07 கி.மீ
02. இறக்காமம் பிரதேச சபை -
08 கி.மீ
03. திருகோவில் பிரதேச சபை
-08 கி.மீ
04. நாவிதன்வெளி பிரதேச சபை -
08 கி.மீ
05. ஆலையடிவேம்பு பிரதேச சபை -
08 கி.மீ
06. நிந்தவூர் பிரதேச சபை -
08 கி.மீ
07. அட்டாளைச்சேனை பிரதேச சபை -
09 கி.மீ
08. சம்மாந்துறை பிரதேச சபை -
09 கி.மீ
09. பொத்துவில் பிரதேச சபை -
09 கி.மீ
10. அக்கரைப்பற்று பிரதேச சபை -
07. கி.மீ
11. அக்கரைப்பற்று மாநாகர சபை -
8.5 கி.மீ
12. கல்முனை மாநாகர சபை -
8.5 கி.மீ
.

0 comments:
Post a Comment