சாய்ந்தமருதின் அரசியல் தலைமைத்துவத்தை பொறுப்பேற்க
பிரதேச
செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் முன்வர வேண்டும்
- அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் வேண்டுகோள்
சாய்ந்தமருது
பிரதேசத்தின் அரசியல் தலைமைத்துவத்தை பொறுப்பேற்க, பிரதேச
செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் முன்வர
வேண்டும் என
அரச வர்த்தக
கூட்டுத்தாபனத் தலைவரும், அகில இலங்கை மக்கள்
காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சாய்ந்தமருது
செஸ்ரோ அமைப்பு
ஏற்பாடு செய்திருந்த
'மருதின் விழுதுகள்'
கௌரவிப்பு பெருவிழா
நேற்று 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு
கருத்து தெரிவிக்கும்
போதே ஏ.எம்.ஜெமீல்
இவ்வாறு கூறியுள்ளார்.
குறித்த
நிகழ்வு சாய்ந்தமருது
பரடைஸ் மண்டபத்தில்,
அமைப்பின் தலைவரும்
சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தருமான
எம்.எம்.உதுமாலெப்பை தலைமையில்
நடைபெற்றது.
அரச
வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான
கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“சாய்ந்தமருது
பிரதேசத்திற்கு இன்று பல வகையிலும் அநீதிகள்
இழைக்கப்பட்டு வருகின்றன. அரசியல் தலைமைகளினால் வழங்கப்படுகின்ற
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிப்பு
செய்யப்படுகின்றன. அற்ப சலுகைகளுக்காக
ஊரைக் காட்டிக்
கொடுக்கின்ற செயற்பாடுகள் நிறையவே இடம்பெற்று வருகின்றன.
இந்த
அபாயகரமான சூழ்நிலையில்
இருந்து ஊரையும்
மக்களையும் பாதுகாப்பதற்கு பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ஊரின்
அரசியல் தலைமைத்துவத்தைப்
பொறுப்பேற்க முன்வர வேண்டும். அதற்கு இப்பிரதேசத்தின்
கல்வியியலாளர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராக
வேண்டும்.
தாமும்
தம் தொழிலும்
என்று இருந்து
விடக் கூடாது.
ஊரின் முன்னேற்றத்தில்
பிரதேச செயலாளர்
எவ்வாறு மிகவும்
கரிசனையுடன் தன்னை முழுமையாக அர்ப்பணித்து சேவையாற்றுகின்றாரோ
அவ்வாறு அனைத்து
அரச சேவை
அதிகாரிகளும் பணியாற்ற முன்வர வேண்டும்” என
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸின்
பிரதித் தலைவர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment