சர்வதேச குடும்ப சுகாதார சேவை நினைவு தின வைபவம்
பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

"சர்வதேச குடும்பநல சுகாதார சேவைகள் தினம் இன்று (09) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. "தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த பிள்ளைகள் சுகாதார சேவையின் இதயமாகும்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.
இவ்வைபவத்தில் விசேட திறமைகளைக் காட்டிய உத்தியோகத்தர்களுக்காக பரிசுகளும் வழங்கப்பட்டன.
இலங்கையில் பெண்களுக்கு மட்டுமே உரித்தான மிகப் பரந்த அரச சேவையாக குடும்பநல சுகாதார சேவை கருதப்படுகிறது.
எமது நாட்டில் இச்சேவையானது நுாறு வருடத்தைத் தாண்டி வரலாறு கண்டுள்ளது.
இதுவரையில் நாடு முழுவதிலுமுள்ள வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ சேவையில் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களின் சேவைகளை பாராட்டும் பொருட்டே குடும்பநல சுகாதார தின வைபவத்தில் பிரதம அதிதியாக ஜனாதிபதி கலந்துகொண்டுள்ளார்.

சுகாதார, போஷாக்கு மற்றும் தேசிய வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர் பைசர் காசிம், அமைச்சரவையின் செயலாளர் அனுர ஜயவிக்கிரம, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித்த மஹிபால, அரச குடும்பநல சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு ஆகியோர் உட்பட அநேகமானோர் இதில் கலந்து கொண்டனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top