நாட்டில் சட்டவிரோத குடியேற்றங்களுக்கு
இனி இடமில்லை
- ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன முடிவு
இனிவரும் காலங்களில் இலங்கையின் எந்தவொரு இடத்திலும் சட்டவிரோதக் குடியேற்றங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் கொழும்பு, வெல்லம்பிட்டி, கொலன்னாவ மற்றும் கம்பஹா பிரதேசங்களில் உள்ள வெள்ளம் வடிந்தோடும் வாய்க்கால்களில் சட்டவிரோத குடியிருப்பாளர்கள் ஆக்கிரமித்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இதனால் நீர் வழிந்தோடுவதற்கான எந்தவொரு வழியும் அங்கு விட்டு வைக்கப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாகவே கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் வெள்ள சேதம் அதிகரித்திருந்தது.
இதனைக் கருத்திற் கொண்டு இனிவரும் காலங்களில் எந்தவொரு இடத்திலும் யாருக்கும் சட்டவிரோதமாக குடியேற அனுமதிப்பதில்லை என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு மாநகரின் 40 வீதமான குடியிருப்புகள் மற்றும் சேரிப்புறக் குடியிருப்புகள் அனைத்தும் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment