வெள்ளத்தினால் வீடுகளுக்கு ஏற்பட்ட
சேதவிபரங்கள் குறித்த
கணக்கெடுப்பு ஆரம்பம்
வீடுகளில் தங்கியிருக்குமாறு வேண்டுகோள்
கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் இன்றும் நாளையும் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்போது வீட்டின் குடியிருப்பாளர்கள் தத்தமது வீடுகளில் தங்கியிருப்பதுடன், இழப்புகள் குறித்த சரியான விபரங்களை கணக்கெடுப்பாளர்களிடம் வழங்குமாறும் கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன்போது சேகரிக்கப்படும் விபரங்களைக்கொண்டே வீடுகளுக்கான இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளது.
0 comments:
Post a Comment