கராத்தே பிரதம போதனாசிரியர்களை
கௌரவித்தலும்,
சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்
நாட்டிலுள்ள
கராத்தே பிரதம
போதனாசிரியர்களை (Chief Instructor &
Examiner) கௌரவித்தலும், பயிற்றுவிப்புக்கரிய அதி உயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும்
நிகழ்வும் விளையாட்டுத்துறை
அமைச்சில் நடைபெற்றது.
விளையாட்டுத்துறை
அமைச்சர் தயாசிறி
ஜயசேகர அவர்களின்
தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில் தென் கிழக்கு பல்கலைக்கழக கராத்தே
போதனாசிரியரும் கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்
தலைவருமான முஹம்மத்
இக்பால் அவர்களுக்கும்
சித்தியடைந்தமைக்கான சான்றிதழ் விளையாட்டுத்துறை
அமைச்சினால் வழங்கிவைக்கப்பட்டது. கராத்தே
பயிற்றுவிப்பதில் சில குறைபாடுகள் காரணமாக மாணவர்களுக்கு
அவ்வப்போது ஏற்படுகின்ற அசௌகரியங்களை தடுக்கும்பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சு இவ்வாறான புதிய
நடைமுறைகளை உருவாக்கி உள்ளது. இவ்வாறான சான்றிதழ்
பெறாதவர்கள் கராத்தே பயிற்றுவிக்க முடியாது என்பது
புதிய நடைமுறையாகும்.
(எஸ்.அஷ்ரப்கான்)




0 comments:
Post a Comment