சதுப்பு நில
ஆக்கிரமிப்புகளே
கொழும்பில்
வெள்ளத்துக்கு
காரணம்!
சமூக ஆர்வலர்கள் விமர்சனம்
கொழும்பைச் சுற்றிலும்
இருந்த சதுப்புநிலப்
பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டமையே கொழும்பிலும் அதனை அண்டியுள்ள
பிரதேசங்களிலும் வெள்ளப் பெருக்கு
ஏற்பட காரணமாக
அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக வெல்லம்பிட்டி,
கொலன்னாவை, கோட்டே, இராஜகிரிய, அம்பதலே ஆகிய
பிரதேசங்களில் தற்போதைக்கு மூன்று வீத சதுப்பு
நிலங்களே எஞ்சியுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது
ஏனைய சதுப்பு
நிலங்கள் அரசாங்கத்தின்
தொடர்மாடி வீடமைப்புத்
திட்டங்களுக்கும், ஏனைய நிர்மாணப்
பணிகளுக்கும் மண்நிரப்பப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் சில
இடங்களில் சதுப்புநிலங்கள்
மண்நிரப்பப்பட்டு தனியார் பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத்
திடல்களாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக சதுப்பு
நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதன்
காரணமாக பேரைவாவியுடன்
தொடர்புபட்டிருந்த நீரோட்ட வழிப்பாதைகள்
முற்றாக மறைக்கப்பட்டுள்ளன. இதுமாத்திரமல்லாமல், மேலதிக நீர் வழிந்தோடும் வழிகளும்
தடைப்பட்டுள்ளன.
இதன் காரணமாகவே
கொழும்பிலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும்
வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.

0 comments:
Post a Comment