: மாலத்தீவு முன்னாள் ஜனாதிபதிக்கு
பிரிட்டனில் புகலிடம்
மருத்துவ சிகிச்சைக்காக பிரிட்டன் சென்ற தனக்கு அந்நாட்டு அரசு புகலிடம் அளித்துள்ளதாக மாலத்தீவு முன்னாள் ஜனாதிபதி முஹம்மது நஷீத் தெரிவித்துள்ளார்.
மாலத்தீவு முன்னாள் ஜனாதிபதியாக இருந்தவர் முஹம்மது நஷீத். இவரது ஆட்சிக்காலத்தில் நீதிபதி ஒருவர் உள்நோக்கத்துடன் கைது செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், அந்நாட்டில் கடந்த ஆண்டு புதிய அரசு பொறுப்பேற்றவுடன் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, முஹம்மது நஷீதும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, தீவிர முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த அவருக்கு பிரிட்டனில் உள்ள மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள மாலத்தீவு நீதிமன்றம் அனுமதியளித்தது.
இதன்படி, பிரிட்டனுக்கு கடந்த ஜனவரி மாதம் முஹம்மது நஷீத் சென்றார். ஆனால், குறிப்பிட்ட காலக்கெடு முடிவடைந்தும் அவர் மாலத்தீவு திரும்பவில்லை.
இந்நிலையில், தனக்கு பிரிட்டன் அரசு புகலிடம் அளித்துள்ளதாக
முஹம்மது நஷீத் அண்மையில் தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்தியை மாலத்தீவில் உள்ள அவரது அலுவலகமும் உறுதி செய்துள்ளது.
Mohamed Nasheed with
British human rights lawyer Amal Clooney
0 comments:
Post a Comment