விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அநுர சேனநாயக்கவுக்கு
சிறைச்சாலை
வைத்தியசாலையில் இடமில்லை!
நேற்று 23 ஆம் திகதி திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு தற்சமயம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவிற்கு சிறைச்சாலைவைத்தியசாலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் சிறைச்சாலைக்கு அழைத்து வந்தவுடனே வைத்திய பரிசோதனைகளுக்குஉள்ளாக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
எனினும் வைத்திய பரிசோதனைகளுக்குப் பின்னர் இவர் வைத்தியசாலையில்அனுமதிக்கப்படாமல் சாதாரண சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ரக்பி வீரர் வசீம் தாஜுடீன் கொலை வழக்கில் சாட்சியங்களை மறைத்தார் என்றகுற்றச்சாட்டில்
குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க, எதிர்வரும் 26ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
0 comments:
Post a Comment