எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இலங்கை பெண்

வரலாற்றுச் சாதனை

 உலகின் மிக உயரமான எவரஸ்ட் சிகரத்தை அடைந்து, ஜெயர்தி குரு உதும்பால என்ற இலங்கைப் பெண்மணி இன்று 21ஆம் திகதி  காலை சாதனை படைத்துள்ளார்.
வரலாற்றிலேயே முதன் முதலாக எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இலங்கைப் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
இந்த சாதனையைப் படைப்பதற்காக சுமார் ஒருமாதத்திற்கு முன்பே குறித்த பெண்ணும் இவருடன் சேர்ந்து யோஹான் பீரிஸ் என்ற பெண்ணும் இந்தியா பயணித்துள்ளார்கள்.
இவ்வாறு சென்ற பெண்களில் ஜெயர்தி குரு உதும்பால என்ற பெண்மணியே முதலாவதாக சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எவரஸ்ட் சிகரமானது உலகிலேயே மிகவும் உயரமான மலை என்பதுடன், கடல் மட்டத்தில் இருந்து 29,029 அடி உயரமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top