கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
இந்திய நிவாரணக் கப்பல்
வெள்ள
அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களுடன் இந்தியாவின்
இரண்டு கப்பல்கள்
கொழும்பு துறைமுகத்தை
வந்தடைந்தன. குறித்த கப்பல்கள் இன்று மதியம்
கொழும்பை வந்தடைந்தன.
இந்தியாவிற்கு
சொந்தமான ஐ.என்.எஸ்
சுடலிஜ் மற்றும்
ஐ.என்.எஸ் சுனயன்
ஆகிய கப்பல்களிலே
இவ்வாறு நிவாரண
பொருட்கள் கொண்டு
வரப்பட்டுள்ளன.
கொழும்பு
துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள குறித்த கப்பலில் நிவாரண
பொருட்களை கையளிக்கும்
நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹ, நிவாரணப்
பொருட்களை அமைச்சர்
ஹர்ஷ டி
சில்வாவிடம் கையளித்தார்.
இதேவேளை,
25 டொன் எடையுடைய
நிவாரண பொருட்களான
மருந்து பொருட்கள்,
குடிநீர் போத்தல்கள்,
கூடாரங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட
பெரும் தொகையான
பொருட்கள் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.


0 comments:
Post a Comment