சாய்ந்தமருதில் இன்று அதிகாலை
வீடு ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல்
சாய்ந்தமருதில் இன்று (14 ஆம் திகதி சனிக்கிழமை) அதிகாலை இனம் தெரியாத
நபர்களினால் வீடு ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது- 15 லீடர் அஷ்ரஃப்
வித்தியாலயத்தின் அண்மையில் குவாட்டஸ் ஒழுங்கையில் உள்ள ஒரு வீட்டின் மீதே
இக்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அப்துல் சலாம் முஹம்மது அஸ்வர் என்பவரின் வீட்டின் மீதே அதிகாலை 2.30
மணியளவில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக வீட்டிலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இக்குண்டுத் தாக்குதலால் வீட்டின் முன்புறமும் உள்புறமும் சேதமடைந்திருப்பதுடன்
வீட்டிற்குள் உறங்கிக்கொண்டிருந்த அஸ்வர்
என்பவரின் தந்தையும் தாயும் காயம் அடைந்துள்ளனர்.
இக்குண்டுத் தாக்குதல் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை
மேற்கொண்டுள்ளனர்.



0 comments:
Post a Comment