இந்தியாவுக்கு ஜனாதிபதி நாளை விஜயம்
எதிர்க் கட்சித் தலைவர். சம்பந்தனுக்கும் அழைப்பு



ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 2 நாட்கள் பயணமாக நாளை இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார்  . டெல்லியில் நாளை பிரதமர் மோடியை ஜனாதிபதி சந்தித்து பேசுகிறார்.
இங்கிலாந்தில் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாளை இந்தியா சென்று . புதுடெல்லியில்  இந்தியப் பிரதமர் மோடியைச்  சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேச்சு நடத்தவுள்ளார்.
பிறகு நாளை மறுநாள் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சிக்கு பயணம் செய்யவுள்ளார். ரெய்சன் மாவட்டத்தில் உள்ள சாஞ்சி, உலகப் புகழ் பெற்ற புத்த மத வழிபாட்டிடமாகும்இலங்கை மகாபோதி சொசைட்டி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று அங்காரிகா தர்மபாலா சிலையை திறந்து வைக்கிறார். அவரது வருகை, இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று இந்திய மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வருப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங்கின் தனிப்பட்ட அழைப்பின் பேரில் வருகை தரும் எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனும், கும்பமேளா நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இந்தியாவின் கும்பமேளா நிகழ்வுக்கு இலங்கையின் ஜனாதிபதியும் எதிர்க்கட்சி தலைவர்ஆர் சம்பந்தனும் அழைக்கப்பட்டுள்ளமையானது, அரசியலில் குறிப்பிடத்தக்க விடயம் என்றுதமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனும் இராஜதந்திர வரப்பிரசாதஅடிப்படையில் அழைக்கப்படவில்லை.
எனினும் இலங்கையின் முதல் பொதுமகன் என்ற அடிப்படையில் ஜனாதிபதியையும், தமிழர்களுக்குதலைவர் என்ற அடிப்படையில் சம்பந்தனையும் இந்தியப் பிரதமர் அழைத்துள்ளதாக நாடாளுமன்றஉறுப்பினர் எம் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தமிழர்களுடன் சிறந்த உறவு பேணப்படுகிறது என்பதை காட்டுவதற்காக செய்யப்பட்டுள்ளது.இது அரசியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்ற செயற்பாடு என்றும் சுமந்திரன்தெரிவித்துள்ளார்.
இந்தநிகழ்வில் பங்கேற்குமாறு சம்பந்தனுக்கு மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சௌஹான், இந்திய பிரதமரின் சார்பில் சம்பந்தனுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகசுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக சம்பந்தன் நேற்று உஜாய்னுக்கு புறப்பட்டுசென்றுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top