சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களில் சேகரிக்கப்பட்ட
வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலினால் சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களில் சேகரிக்கப்பட்ட நிதி மற்றும் நிவாரணப் பொருட்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையிலான அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்பு நிலையத்தில் ஒப்படைப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நிதி மற்றும் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் குழுவினரை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் முன்றலில் துஆப் பிரார்த்தனையுடன் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் முன்னிலையில் பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் மற்றும் சுமார் 15 இலட்சம் ரூபா பணம் என்பன குழுவினரிடம் கையளிக்கப்பட்டன.
சாய்ந்தமருது ஜம்மிய்யத்துல் உலமா தலைவரும், சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் உப தலைவருமான மௌலவி யூ.எல்.எம்.காசிம் தலைமையிலான பயணக் குழுவில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.தில்சாத், மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் எஸ்.எம்.கலீல், வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் எம்.எம்.சத்தார் உட்பட பள்ளிவாசல்களின் மரைக்காயர்கள் சிலரும் பங்கேற்றுள்ளனர்.
0 comments:
Post a Comment