துருக்கியில் 17 பத்திரிகையாளர்கள் கைது!
காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

பயங்கரவாதக் குழுவில் உறுப்பினர்களாக இருந்த குற்றச்சாட்டு தொடர்பாக பத்திரிகையாளர்கள் 17 பேரை காவலில் வைக்க இஸ்தான்புல் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு அமெரிக்காவில் வசித்து வரும் மதபோதகர் ஃபெதுல்லா குலென் பின்புலமாக இருந்ததாக ஜனாதிபதி ஆதுர்கான் கூறி வருகிறார். இதையடுத்து, குலெனின் பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்ததாக 21 பத்திரிகையாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு இஸ்தான்புல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 4 பத்திரிகையாளர்கள் விடுவிக்கப்பட்டனர். மூத்த பத்திரிகையாளர் நஸ்லி இலிசாக் ட்பட 17 பேர், வழக்கு விசாரணையை சந்திக்கும் வகையில் காவலில் வைக்க இஸ்தான்புல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்த பிறகு, ராணுவம், கல்வித்துறை, நீதித் துறையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இதில், பெரும்பாலானோர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top