கை, கால்கள் இல்லாமல் பிறந்து பக்கெட்டுக்குள்
வலியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்
இளம்பெண் ரஹ்மா
நைஜீரியா நாட்டில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தை ரஹ்மா ஹருனா Rahma Haruna, பிறந்து ஆறு மாதத்தில் மர்மமான நோய் அறிகுறியுடன் அவதிப்படுவதை கவனித்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மர்மநோய் அவரது உடல் உறுப்புகளின் வளர்ச்சியை பாதித்தது.
தற்போது சுமார் 20 வயதை அடைந்தாலும் ரஹ்மா கை, கால்கள் இல்லாமல் அவரது உடல் அமைப்பு மிகச் சிறியதாக ‘மரப்பாச்சி’ பொம்மை போல் இருக்கிறது. தனது எல்லா தேவைகளுக்கும் பெற்றோரின் உதவியை நாடும் நிலையில் அவர் உள்ளார். தினம் தினம் உடலில் ஏற்படும் வலியுடனும், வேதனையுடனும் ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டுக்குள் (பிளாஸ்டிக் டப்) தனது ஆயுளை கழித்து வருகிறார்.
ரஹ்மா ஹருனாவின் சகோதரர் பாஹட், அவருக்கு எல்லா உதவிகளையும் அன்புடன் செய்து வருகிறார். அவளை கிராமத்தில் உள்ள எல்லா இடங்களுக்கும் சளைக்காமல் அழைத்து செல்கிறார். கை, கால்களை இழந்த ரஹ்மாவின் இந்த வாழ்க்கையை வெளிஉலகம் அறிய இவர்கள் எடுக்கும் முயற்சியால், அவரின் மருத்துவ உதவிக்கும், பிற உதவிகளுக்கும் பலரிடம் இருந்து நன்கொடைகள் கிடைத்த வண்ணம் உள்ளது.
தற்போது, பிளாஸ்டிக் பக்கெட்டுக்குள் இருந்தபடியே சக்கர நாற்காலியில் வலம் வரும் ரஹ்மா, தனியாக ஒரு மளிகை கடை வைத்து தொழில் நடத்த வேண்டும் என்று ஆசை இருப்பதாகவும், மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை என் கடைக்கு வந்து வாங்கி செல்ல வேண்டும் என்று விரும்புவதாகவும் தன்னம்பிக்கை தவழும் புன்னகையுடன் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment