நடைபாதையை ஏன் ஆக்கிரமித்தீர்கள்?

எருமை மாட்டை பேட்டி எடுக்கும் பாகிஸ்தான் நிருபர்

பாகிஸ்தானின் லாகூர் நகரில் வீதிகளைக் கடக்கும் போது கடைப்பிடிக்கும் ஒழுங்ங்குகளை மதிக்காத மனிதர்களைப் பற்றி அங்கிருந்த எருமை மாட்டிடம் பாகிஸ்தானின் பிரபல ஜியோ தொலைக்காட்சியில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் அமின் ஹபீஸ் என்பவர் கருத்து கேட்கும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. எருமை மாட்டிடம் கருத்து கேட்பதோடு மட்டுமின்றி எருமை மாட்டின் குரலோசையை இவர் மொழிபெயர்க்கும் அழகும் பலரை கவர்ந்துள்ளது
பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள மக்கள் சாலை விதிகளை ஒழுங்காக கடைபிடிப்பதில்லை. முக்கியமான  அதிவேக பாதைகளை கடந்து செல்ல மேம்பாலங்கள் அமைக்கப்பட்டிருந்தும் பெரும்பாலும் இங்குள்ளவர்கள் இரு சாலைகளுக்கு இடையிலான உயரமான தடுப்பு சுவர்களை தாண்டிச் சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலைகளை கடக்கின்றனராம்.
இங்கு வாழும் ஐந்தறிவுள்ள மாடுகள்கூட மேம்பாலங்களுக்கு செல்லும் படிகட்டுகளில் சாவகாசமாக ஏறியும், இறங்கியும் சென்று பாதைகளை கடக்கும்போது ஆறறிவு கொண்ட மனிதர்கள் சற்று சிரமத்தை தவிர்ப்பதற்காக இப்படி உயிருக்கு ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனராம்.
ஆனால், பாலங்களின் படிக்கட்டுகளில் மாடுகள் போவதால்தான் நாங்கள் பாலங்களை பயன்படுவதில்லை என ஒருதரப்பினர் கூறுகின்றனராம்.
இதுதொடர்பான ஒரு செய்தி தொகுப்புக்காக பாகிஸ்தானின் பிரபல ஜியோ தொலைக்காட்சியில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் அமின் ஹபீஸ் என்பவர்ம் வீடியோ கேமரா மேனுடன் படப்பதிவில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, பாதை ஒழுங்குகளை மதிக்காத மனிதர்களைப் பற்றி அங்கிருந்த எருமை மாட்டிடம் அவர் கருத்து கேட்கும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. கருத்து கேட்பதோடு மட்டுமின்றி எருமை மாட்டின் குரலோசையை இவர் மொழிபெயர்க்கும் அழகு பலரை கவர்ந்துள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top