எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!
செல்லிடப்பேசி மூலம் நூதன மோசடி
ஏமாந்து விடவேண்டாம்!
செல்லிடப்பேசி மூலமாக தற்போது நூதன மோசடி நடைபெற்று வருவதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது. இப்படியான மோசடி எமது அண்டை நாடான இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
இச்செய்தியை அறிந்து சகலரும் அவதானமாக இருக்குமாறும் நண்பர்களுக்கு இத்தகவலைத் தெரியப்படுத்துமாறும்
வேண்டுகின்றோம்.
இம் மோசடி பற்றி தெரியவருவதாவது,
அறிமுகமில்லாத நபர்கள் வங்கியில் இருந்து ஏடிஎம் உத்தியோகத்தர்கள் பேசுவதுபோல் செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு ஏடிஎம் அட்டையை புதுப்பிக்க வேண்டும் என்றும், புது அட்டை அனுப்புவதாக சொல்லியும் ஏடிஎம் அட்டை எண், இரகசிய எண் மற்றும் ஏடிஎம் அட்டையின் பின்புறம் உள்ள சிவிவி எண் ஆகியவற்றை கேட்டு தகவல்களை பெற்று உரியவர்களுக்கு தெரியாமலே பணத்தை எடுத்து மோசடி செய்து வருகின்றனர்.
எந்த ஒரு சமயத்திலும் எந்த வங்கியில் இருந்தும் இவ்வாறான விவரங்களை கேட்பதில்லை கேட்கவும் முடியாது. என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதுமாத்திரமல்லாமல் உங்கள் செல்லிடப்பேசி எண்ணுக்கு கார் அல்லது லட்சக்கணக்கில் பரிசு விழுந்திருப்பதாக தெரிவித்தோ உங்களது பெயர், வயது, மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்களை கேட்டு வரும் குறுஞ்செய்திகளை உண்மையென நம்பி எந்த விவரங்களையும் தெரிவிக்கவும் கூடாது.
மேற்படி கார் அல்லது பரிசுத் தொகை அனுப்ப வைப்பாக பணம் கட்ட வேண்டும் எனச் சொல்லி பணத்தை கட்ட வைத்து ஏமாற்றியும் வருகின்றனர். அதேபோல், வெளிநாட்டு வங்கி (பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்த்) மற்றும் கோக கோலா போன்ற நிறுவனங்கள் உங்களுக்குப் பணம் அனுப்ப இருப்பதாகவும் அதற்கு மத்திய வங்கி ஒப்புதல் பெற வேண்டும் எனவும் மின்னஞ்சல் அனுப்புவது போல் பொய் தகவல்களை அனுப்பி அதற்கு வைப்பாக பணம் கட்ட வேண்டும் எனச் சொல்லி நம்ப வைத்து மோசடி செயல்களில் ஈடுபட்டும் வருகின்றனர். இத்தகைய மோசடிகளை நம்பி பொதுமக்கள் ஏமாந்துவிட வேண்டாம் .இது விடயத்தில் எச்சரிக்கையாக இருந்து கொள்ள
வேண்டும்.
0 comments:
Post a Comment