ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்
வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டம்
இன்று தேசிய ரீதியில் ஆரம்பம்
ஸ்ரீ
லங்கா முஸ்லிம்
காங்கிரஸினால் நடைமுறைப்படுத்தும் ‘வீட்டுக்கு
வீடு மரம்’
செயற்திட்டம், முஸ்லிம்களின் தனித்துவஅரசியலுக்காக
தன் உயிரையே
தியாகம் செய்த
ஶ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் முன்னாள்
வட – கிழக்கு
மாகாண சபை
உறுப்பினர், அக்கரைப்பற்றைச் சேர்ந்த மர்ஹூம் அலி
உதுமானின் நினைவு
நாளான ஆகஸ்ட்
01 ஆம் திகதி,
நாடு தழுவிய
ரீதியில் ஆரம்பித்து
வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஸ்ரீ
லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தேசிய
தலைவர் அமைச்சர்
ரவூப் ஹக்கீம்
திருகோணமலை மாவட்டம் கந்தளாயில் இன்று ஆகஸ்ட் 1ஆம் திகதி
வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டத்தை ஆரம்பித்து
வைக்கின்றார்.
இச்செயற்திட்டத்தின்
மூலம் மரம்
நடப்படும் குறித்த
வீட்டின் குடும்பத்தினருடன்
கட்சி நெருக்கமான
உறவைப பேணுதல்,
இளைஞர் காங்கிரஸ்
உறுப்பினர்களை கட்சியின் நடவடிக்கைக்கு தொடர்சியாக இயங்கச்
செய்தல், இளைஞர்
அணி செயலமர்வுகளுக்கு
மரம் நடப்பட்ட
குடும்பத்திலுள்ள இளைஞர்களை உள்ளீர்த்தல், கட்சியின் தொழில்
வாய்ப்புக்கள் மற்றும் அக்குடும்பத்தினருக்கான
உதவி வழங்குதல்,
கல்வி நடவடிக்கைகளுக்கு
உதவுதல் குடிசை
கைத்தொழிலுக்கு வழிசமைத்தல் என்பன போன்றவற்றின் மூலம்
பிரதேச பொருளாதார
வளர்ச்சிக்கு உதவுவதுடன் கட்சியை ஆழ விதைத்தல்
போன்ற நோக்கத்துடன்
இத்திட்டம் செயற்படுத்தப்படுவதாக கட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment