கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது சிறுவர் பூங்கா
காரைதீவு பிரதேச சபையின் காரைதீவு சிறுவர் பூங்கா
ஒப்பிட்டுப் பாருங்கள்! சிந்தியுங்கள்!! செயலாற்றுங்கள்!!!
கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருதிலுள்ள தலைவர் அஷ்ரஃப் ஞாபகர்த்த
சிறுவர் பூங்காவையும் காரைதீவு பிரதேச சபையின் காரைதீவிலுள்ள சிறுவர் பூங்காவையும்
இங்கு தனித்தனியாகக் காட்சிப்படுத்தியுள்ளோம். இரண்டு பூங்காக்களும் கடற்கரை அருகாமையிலேயே
அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு நாம் காட்சிப்படுத்தியிருப்பது இப்பிரதேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திக்
கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் கவனத்தைப் பெறுவதற்கும் வாக்களித்துக் கொண்டிருக்கும்
மக்களைச் சிந்திக்க வைப்பதற்குமேயாகும்.
மத்திய அரசில் எந்த ஒரு அரசியல் அதிகாரத்தையும் பெற்றிராத தமிழ்
சகோதரர்கள் தங்கள் தமிழ் பிரதேசங்களில் பாதைகளை சீராக அமைத்தும் பூக்கன்றுகளையும் மரக்கன்றுகளையும்
வளர்த்து பூங்காக்களை கடற்கரை அருகாமையிலும் எவ்வளவு அழகாக வைத்து நிர்வகித்து வருகிறார்கள்
என்பதைப் பாருங்கள்.
மாவட்டத்தின் சாரதிகளும் நாங்களே! நடத்துநர்களும் நாங்களே!!
என்று கூறுபவர்கள், மத்திய அரசில் அமைச்சர், பிரதி அமைச்சர்கள்,
மாகாண முதலமைச்சர். மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என்போரின்
ஆதரவாளர்கள், அபிமானிகள் பெரும் எண்ணிக்கையில் வாழும் சாய்ந்தமருது மக்களின் குழந்தைகளுக்காக
தலைவர் அஷ்ரஃப் அவர்களின் பெயரை வைத்துள்ள
சாய்ந்தமருதிலுள்ள அஷ்ரஃப்
ஞாபகர்த்த சிறுவர் பூங்காவையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!
காரைதீவில் உள்ள சிறுவர் பூங்கா மலைநாட்டுப் பிரதேசங்களில் இருப்பது
போன்று காட்சியளிக்கின்றது.
சாய்ந்தமருதிலுள்ள அஷ்ரஃப் ஞாபகர்த்த சிறுவர் பூங்கா சகாரா பாலைவனத்தில்
அமைக்கப்பட்டது போன்று இரவு நேரத்தில் வெளிச்சம் எதுவுமின்றி பாழடைந்த நிலையில் காணப்படுகின்றது.
ஒப்பிட்டுப் பாருங்கள்!
சிந்தியுங்கள்!! செயலாற்றுங்கள்!!!
காரைதீவு பிரதேச சபையின் காரைதீவு சிறுவர் பூங்கா
கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது சிறுவர் பூங்கா
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.