ஓய்வுபெற்ற விவாகப் பதிவாளர் முத்து
முஹம்மதுவின்
26 வருட சேவைக்கு பாராட்டும் கௌரவமும்!
சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கரைவாகுப்பற்று
(சாய்ந்தமருது 01) பிரிவுக்கு முஸ்லிம் விவாக பதிவாளராக 26 வருடங்கள் சேவையாற்றி ஓய்வுபெற்ற எம்.எஸ்.முத்து முஹம்மதுவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று 20 ஆம் திகதி புதன்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.ஏ.ஜமால் முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ், நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை, சாய்ந்தமருது பிறப்பு, இறப்பு மற்றும் விவாக பதிவாளர்
ஒன்றியத்தின் தலைவர் எம்.எம்.உதுமாலெவ்வை
(எவசைன்), சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் மெளலவி எம்.ஐ.ஆதம்பாவா (ரஷாதி) உட்பட பிறப்பு,
இறப்பு மற்றும் விவாக பதிவாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மிக நேர்மையாக விவாக பதிவாளராக கடமையாற்றி ஓய்வு பெற்ற எம்.எஸ்.முத்து முஹம்மது பிரதேச செயலாளர் உள்ளிட்ட
பிறப்பு, இறப்பு மற்றும் விவாக பதிவாளர்களால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இவ்வைபவத்தில் புதிதாக விவாகப் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.ஐ.செய்னுலாப்தீனுக்கு பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீமினால் விவாகப் பதிவு ஆவணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment