கல்முனை
மாநகர சபையின்
குப்பைத்
தொட்டியாக சாய்ந்தமருது
கல்முனை மாநகர சபையின் குப்பைத் தொட்டிகளில் ஒன்றாக சாய்ந்தமருதிலுள்ள சில இடங்கள் காட்சியளிக்கின்றன
கல்முனை மாநகர சபை தனது அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்களில் கழிவுகளை சீராக அகற்றுவதில் இன்றுவரை
சீரான நடவடிக்கையை மேற்கொண்டு வெற்றிகொள்ளவில்லை என்பதன் காரணமாகவே இந்த அவலநிலை என
மக்கள் தெரிவிக்கின்றனர் .
கல்முனை மாநகர சபைக்கு அருகாமையில்
உள்ள காரைதீவு பிரதேச சபை அதன் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்றுவதில்
கொண்டிருக்கும் சீரான நடவடிக்கை கல்முனை மாநகர சபையிடம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருது லீடர் அஷ்ரஃப்
வித்தியாலயத்திற்கு அருகிலும் பழைய ஆஸ்பத்திரி வீதியிலும் கழிவுகள் வீசப்பட்டு எவ்வாறு
வீதியில்சிதறிக்கிடக்கின்றன, கட்டாக்காலி நாய்கள், ஆடுகள், மாடுகள் அவைகளை எப்படி கிளறிக்
கொண்டிருக்கின்றன என்பதைக் காணமுடியும்.
சாய்ந்தமருது லீடர் அஷ்ரஃப்
வித்தியாலயத்தில் சின்னஞ் சிறுவர்களே கல்வி கற்று வருகின்றனர். இப்பாடசாலைக்கு அருகில்
கழிவுகள் கொட்டப்படுவதாலும் அவைகள் நாளாந்தம் அகற்றப்படாததாலும் துர்நாற்றம் ஏற்படுவதுடன்
நோய்களைப் பரப்பும் கொசுக்களும் உருவாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் சிறுவர்களிடம்
நோய்கள் எளிதில் தொற்றுவதற்கான துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருப்பதாக கவலை வெளியிடப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.