முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை
புகழ் பெற்றவர்களின்
பட்டியலில் இணைத்து கெளரவிக்க முடிவு
சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்த வீரர்களை ‘ஹால் ஆப் பேம் ICC Hall of Fame’ என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெளரவிக்கிறது.
அந்த பட்டியலில் புதியதாக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரர் என்ற சிறப்புக்குரியவர் முரளிதரன். இலங்கை நாட்டவர் ஒருவருக்கு இந்த கெளரவம் கிடைக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.
மறைந்த வீரர்கள் வேகப்பந்து வீச்சாளர் ஜார்ஜ் லோமான்George Lohmann, (இங்கிலாந்து), தொடக்க ஆட்டக்காரர் ஆர்தர் மோரிஸ் Arthur Morris (ஆஸ்திரேலியா) ஆகியோரும் இந்த பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.