“இஸ்லாமிய குடும்ப வாழ்வு“
விசேட விரிவுரை


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில், அதனது தலைமையகம் தாருஸ்ஸலாமில் இரு வாரங்களுக்கு ஒரு முறை செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ச்சியாக இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர் இடம்பெற்று வருகின்றது அல்ஹம்துலில்லாஹ்.
இத்தொடர் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உலமாக்களினால் நடத்தப்படுகின்றமை விசேட அம்சமாகும். இவ் இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர் அஹ்லாக், தப்ஸீர், ஸீரா, தாரீஹ் ஆகிய நான்கு பிரதான தலைப்புகளில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜூலை மாதம் 26 ஆம் திகதி மாலை 7.00 மணிக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில், மௌலவி எம்.எச்.எம். நிஸாம் காஸிமி அவர்களினால்குடும்ப வாழ்வுஎன்ற தலைப்பில் விசேட விரிவுரை நிகழ்த்தப்படவுள்ளது இன்ஷா அல்லாஹ்.
மக்ரிப் தொழுகைக்கான ஏற்பாடுகள் தாருஸ்ஸலாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு பணிவாக வேண்டப்படுகின்றனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top