ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ள

ஒரே நோயால் சந்திரனில் கால் பதித்த மூன்று பேரின் உயிரிழப்பு!

சந்திரனுக்கு சென்று கால்பதித்வர்களில் மூன்று பேர் இதயக் கோளாறு காரணமாக உயிரிழந்தது ஆச்சிரியத்தையும் பெரும் கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.
சந்திரனுக்கு விண்கலம் மூலம் சென்றிருந்த இந்த மூன்று மனிதர்களும் இதயக் கோளாரு காரணமாக ஒரே மாதிரி உயிரிழந்துள்ளதுதான் ஆச்சிரியத்தை உண்டுபண்ணியுள்ளது.
1969ம் ஆண்டு அப்போலோ-11 என்ற விண்கலத்தில் சந்திரனுக்கு பயணமானார் நீல் ஆம்ஸ்ட்ராங். அவருடன் எட்வின் ஆல்ட்ரின் என்பவரும் உடன் சென்றார். இருதய அறுவை சிகிச்சை சிக்கல்களால் பாதிக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் 2012-ம் ஆண்டு தனது 82-வது வயதில் உயிரிழந்தார்.
அதேபோல், ஜேம்ஸ் இர்வின் என்பவர் அப்போலோ 15 விண்கலத்தில் 1972-ம் ஆண்டு சந்திரனுக்கு சென்றார். சந்திரனுக்கு சென்று வந்த இரண்டாவது வருடத்தில் இர்வினுக்கு 43 வயது இருக்கையில் முதன் முதலில் நெஞ்சு வலி ஏற்பட்டது. அதன் பிறகு அவரது இதயத்துடிப்பில் சிக்கல் இருந்து கொண்டே தான் வந்தது. இறுதியில் 1991-ம் ஆண்டு அவர் உயிரிழந்தார்.
அப்போலோ 17 விண்கலத்தில் பயணித்த ரொனால்டு ரான் நெஞ்சு வலி காரணமாக தனது 56-வது வயதில் உயிரிழந்தார்.
இவ்வாறுசந்திரனுக்கு சென்றவர்களில் மூன்று பேர் இதயக் கோளாறு காரணமாக உயிரிழந்தது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.
இதுவரை மொத்தம் 24 மனிதர்கள் சந்திரனுக்கு விண்கலம் மூலம் சென்று கால்பதித்துள்ளனர். அதில் 7 பேர் இந்த ஆய்வின் போது உயிரிழந்து இருந்தனர்.
சந்திரனுக்கு விண்கலம் மூலம் சென்றிருந்த இந்த மூன்று மனிதர்களும் இதயக் கோளாரு காரணமாக ஒரே மாதிரி உயிரிழந்துள்ளதுதான் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இருப்பினும் அவர்களின் நோய்க்கும் சந்திரனுக்கு சென்று வந்ததற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் மற்றொரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top