அவதூறு வழக்கு: விஜயகாந்துக்கு பிடிவாரண்ட்


தே.மு.தி.., தலைவரும் நடிகருமான விஜயகாந்த், அவரது மனைவி பிரமேலதாவுக்கு திருப்பூர் நீதிமன்றம்  பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த 2015ம் வருடம் நவம்பர் 6ம் திகதி பல்லடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக தே.மு.தி.., விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் 2 பேரும் நான்கு முறையும் நேரில் ஆஜராகவில்லை. இதனையடுத்து விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட் நீதிபதி அலமேலு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில், விழுப்புரம் மாவட்டம் எரஞ்சியில் நடந்த கூட்டத்தில் முதல்வரை அவதூறாக பேசியதாக, விஜயகாந்த், பிரேமலதா, பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், விஜயகாந்த், பிரேமலதா ஆஜராகவில்லை. மற்ற இருவரும் ஆஜரானார்கள்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top