வஸீலா சாஹிர் எழுதியநிலவுக்குள் சில ரணங்கள்
சிறுகதைத் தொகுதிவெள்ளோட்ட விழா

(எம்.எஸ்.எம்.சாஹிர்)

கல்லொலுவ, மினுவாங்கொடை வஸீலா ஸாஹிர் எழுதியநிலவுக்குள் சில ரணங்கள்சிறுகதைத் தொகுதியின் வெள்ளோட்ட விழா எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9.30க்கு கொழும்பு - 10 ஸ்ரீ சங்கராஜ மாவத்தையிலுள்ள அல் -ஹிதாயா மகாவித்தியாலயத்தின் எம்.ஸி. பஹார்தீன் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பிரதம ஆசிரியருமான அல்-ஹாஜ் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், மூஷான் இன்டர்நெஷனல் தலைவர் அல்-ஹாஜ் முஸ்லிம் ஸலாஹுதீன் முன்னிலை வகிப்பதோடு, விழாவின் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கலந்து கொள்கிறார்.
நிகழ்வின் முதற்பிரதியை புரவலர் புத்தகப் பூங்கா நிறுவனர் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொள்கிறார்.
விழாவில் கௌரவ அதிதிகளாக, நீர்கொழும்பு, மேல்மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் .ஆர்.. ஹபீஸ், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் முஹம்மது ஈசான், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தமிழ்ச் செய்தி நடப்பு விவகாரப் பணிப்பாளர் அல் - ஹாஜ் யூ.எல்.யாக்கூப், லேக் ஹவுஸ் தமிழ்ப்பிரசுரங்களின் ஆலோசகர் எம்..எம்.நிலாம், ஸ்ரீலங்கா ஷரீஆக் கவுன்ஸில் தலைவர் மௌலவி எம்.ஸி. ஹஸ்புல்லாஹ் அப்துல் காதர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் அல் - ஹாபிழ். எஸ். முஹம்மது ஹனீபா, செரண்டிப் எப்.எம். பிரதானி திரு. நல்லையா சிவராஜா, அஸீஸ் மன்றத் தலைவர் அல் - ஹாஜ் அஷ்ரப் அஸீஸ், இலங்கை ஏற்றுமதி அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டாக்டர் யூசுப் கே. மரைக்கார் மற்றும் விசேட அதிதிகள், சிறப்பு அதிதிகள், இலக்கியப் புரவலர்கள், பிரபல வர்த்தகர்கள், கலை இலக்கியவாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
நிகழ்வுகளாக, கிராத்  - அல் - ஹாபிழ் முஹம்மது ஆதில், வரவேற்புரை - மனித நேயன் இர்ஷாத் . காதர், ஆசியுரைவைத்திய கலாநிதி தாஸிம் அஹமது , தலைமை உரை - நவமணி பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன், கவி வாழ்த்து - சந்தக் கவிமணி கிண்ணியா அமீர்அலி, நூலாசிரியர் அறிமுகம் - லேக் ஹவுஸ் தமிழ்ப்பிரசுரங்களின் ஆலோசகர் எம்..எம். நிலாம், நூல் நயவுரை - நவமணி சிரேஷ்ட ஆசிரியர் பீட உறுப்பினர்காவ்யாபிமானிகலைவாதி கலீல், விபரணப்பாடல் - செரண்டிப் எப்.எம். அறிவிப்பாளர் கன்ஷா பாரீஸ், பிரதம அதிதியின் உரை மற்றும் ஏற்புரை - நூலாசிரியர் வஸீலா ஸாஹிர், நன்றியுரைஊடகவியலாளரும்  நவமணி ஆசிரியர் பீட உறுப்பினருமான சாய்ந்தமருது எம்.எஸ்.எம். ஸாஹிர் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.
உதயம் ரீ.வி. பொது முகாமையாளர் ஹிஸாம் சுஹைல் நிகழ்வை தொகுத்து வழங்கவுள்ளதோடு, ஊடக அனுசரணையை டெய்லி சிலோன் வழங்குகின்றது.
மேலும் என்.எம்.அமீன், எம்..எம்.நிலாம், இர்ஷாத் .காதர், கலைவாதி கலீல் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாய் அழைக்கின்றனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top