சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை

அமைச்சர் பைஸர் முஸ்தபா இணக்கம்

சாய்ந்தமருதுக்கு  தனியான உள்ளுராட்சி சபை ஒன்றை வழங்குவதற்கு உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா இணக்கம் தெரிவித்துள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நியாயமானது எனவும் மக்கள் நலன் சார்ந்தது எனவும் தனது உரையில் சுட்டிக்காட்டிய அமைச்சர் பைஸர் முஸ்தபா உள்ளுராட்சி சபைகளை வரையறுப்பது தொடர்பில் சட்டத்தரணி சந்தன தலைமையில் தன்னால் நியமிக்கப்பட்ட குழுவுக்கு சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை தொடர்பான ஆவணங்களைக் கையளித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.
இங்கு அமைச்சர் றிஸாட் பதியுதீன் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டியதன் அவசியம் பற்றி தர்க்கரீதியாக காரணங்களை முன் வைத்தார்.
இதேவேளை,சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை ஒன்றை அமைப்பதற்கு உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா அமைச்சின் உபகுழுவின் தலைவருக்குப் பரிந்துரை செய்துள்ளதாக அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் .எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை ஒன்றை அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று 22 ஆம் திகதிகொழும்பில் வர்த்தக கைத்தொழில் அமைச்சில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற போதே உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா இந்தப்பரிந்துரையைச் செய்ததாக .எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.
வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிஸாட் பதியுதீனின் அழைப்பை ஏற்று வர்த்தக கைத்தொழில் அமைச்சுக்கு அமைச்சர் பைஸர் முஸ்தபா வருகைதந்து இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு எந்தத் தடைகள் வந்தாலும் அதை முறியடித்த சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை ஒன்றை அமைப்பதற்கு துரித நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் அமைச்சர் றிஸாட் பதியுதீனிடம் உறுதியளித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் .எம்.ஜெமீலின் ஏற்பாட்டில் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை அமைப்பது தொடர்பில் பல செயற்திட்டங்களை முன்னெடுத்தவரும் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் கலீல் எஸ் முகம்மட் உள்ளுராட்சி சபை அமைப்பது தொடர்பில் விளக்கமளித்து ஆவணங்களையும் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சாய்ந்தமருது மத்திய குழுவின் தலைவர் .எல்.எம்.அன்வர் செயலாளர் ஐ.எல்.ஏ. றாஸீக் உட்பட பல முக்கியஸ்த்தர்களும் கலந்த கொணடனர்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top