18ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு அளித்தமை போன்று
'வடக்கு, கிழக்கு
இணைப்புக்கு ஆதரவு அளித்தால்
போராட்டம் முன்னெடுக்கப்படும்'
கிழக்கு எழுச்சியின் தலைவர் வபா பாறூக்
முஸ்லிம்
காங்கிரஸ்; தலைவர் ரவூப் ஹக்கீம் வடக்கு, கிழக்கு
மாகாண இணைப்புக்கு ஆதரவு அளிக்கவுள்ளார். இவ்வாறு ஆதரவு
அளிக்கும் பட்சத்தில் இதற்கு எதிராக மக்கள் சக்தியை ஒன்றிணைத்துக்கொண்டு போராடவுள்ளதாக கிழக்கு எழுச்சியின் தலைவர் வபா பாறூக் தெரிவித்துள்ளார்
கிழக்கு எழுச்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு சாய்ந்தமருது பரடைஸ்
வரவேற்பு மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 19 ஆம் திகதி நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு
கூறியுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம் காங்கிரஸ்; தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஏலவே
பணம் வாங்கிக்கொண்டு 18ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு அளித்தமை போன்று வடக்கு,
கிழக்கு மாகாண இணைப்புக்கும் ஆதரவு அளிக்கவுள்ளார்.
'கிழக்கு மண்ணில் உள்ள தலைமைத்துவம் மட்டுமே முஸ்லிம் காங்கிரஸின்
நோக்கத்தை அடையாளப்படுத்தலாம். இல்லாவிட்டால,; அந்த தலைமைத்துவம் தனது சுய தேவைகளை
மாத்திரம் அடைந்து கொள்ளும். எக்காரணம் கொண்டும் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்புக்கு
முஸ்லிம் தலைமைகள் ஆதரவு வழங்கக் கூடாது. ஆனால், அவர்களின் சுயதேவைகளுக்காக அதற்கு
ஆதரவு வழங்க முன்வந்தால் மக்கள் சக்தியை ஒன்றிணைத்து போராடுவோம்' என்றும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment