சாய்ந்தமருது குவாஷி நீதிமன்றக் கட்டடம் பூர்த்தியாகியும்
திறந்து வைக்கப்படாத நிலையில்
பொலிவேரியன் குடியேற்றக் கிராமத்தில் நிர்மானிக்க்ப்பட்டு வந்த சாய்ந்தமருது கரைவாகு தெற்குப் பிரிவுக்கான குவாஷி நீதிமன்றக் கட்டடம் பூர்த்தியாகிய நிலையில் இதுவரையும் இக்கட்டடம் திறந்து வைக்கப்படாமல் இருந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.
குவாஷி நீதிமன்றக் கட்டடம் பூர்த்தியாகியுள்ள போதிலும் இக்கட்டடத்திற்கு
மின்சார வசதி, குடிநீர் வசதி எதுவும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என கட்டடம் திறக்கப்படாமைக்கான காரணம் தெரிவிக்கப்படுகின்றது.
இதுமாத்திரமல்லாமல் குவாஷி நீதிமன்றக் கட்டடத்தைச் சுற்றிவர
எந்த பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின்
தலைவரும் அமைச்சருமான
ரவூப் ஹக்கீம்
அவர்களின் ஏற்பாட்டில்
சுமார் 60 இலட்சம் ரூபா செலவில் சாய்ந்தமருது, கரைவாகு தெற்குப் பிரிவுக்கான
குவாஷி நீதிமன்றக்
கட்டடம் நிர்மானிக்க்ப்பட்டதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருது
கரைவாகு தெற்குப் பிரிவுக்கான
குவாஷி நீதிமன்றத்தின் நீதிபதியாக டாக்டர்
ஐ.எம்.
ஷெரிப் (ஜே.பி) அவர்கள்
கடமை செய்து
வருகின்றார்கள்.
0 comments:
Post a Comment