சிறுவர்களுக்கான விளையாட்டு
உபகரணத் தொகுதிகள்,
நவீன வசதிகள் இல்லாத தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த பூங்கா
சாய்ந்தமருதில் அமைக்கப்பட்டுள்ள தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த பூங்கா சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணத் தொகுதிகள் மற்றும்,நவீன வசதிகள் எதுவும் பூரணமாக அமைத்துக்
கொடுக்கப்படாத நிலையில் இன்றுவரை இருந்து கொண்டிருப்பதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி சாய்ந்தமருதில் நிர்மாணப் பணிகள் முற்று முழுதாக முடிவுறாத
நிலையில் திறந்து வைக்கப்பட்ட தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த பூங்கா சுமார் 33 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் திறந்த அன்றிருந்த தோற்றத்திலேயே
கட்டடத்துடன் மாத்திரம் இப்பூங்கா காட்சியளித்துக் கொண்டிருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு
வருடங்களுக்கு முன் இப்பூங்கா திறந்து வைக்கப்பட்ட போது நிர்மாணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணத் தொகுதிகள் உள்ளிட்ட இன்னும் சில நவீன வசதிகள் இப்பூங்காவில் மேற்கொள்ளவேண்டியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
அன்று இப்பணிகள் அனைத்தும் நிறைவுற்ற பின்னரே கல்முனை மாநகர சபையிடம் இப்பூங்காவை ஒப்படைத்து பூரணத்துவமான பூங்காவாகாக பொது மக்களிடம் கையளிக்கத் திட்டமிட்டிருந்த நிலையில் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் பெயர் சூட்டப்பட்ட இப்பூங்காவை அவரது 66வது பிறந்த தினமான ஒக்டோபர் 23 ஆம் திகதி திறக்க வேண்டும் என சிலர் விரும்பியதன் பேரிலேயே இப்பூங்கா 2014 ஆம் ஆண்டு அரை குறையான வேலைகள் முடிந்த நிலையில் திறந்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் பெயர் சூட்டப்பட்ட இப்பூங்கா சகல
வசதிகளும் செய்யப்பட்டு பூரணத்துவமாமான ஒரு பூங்காவாக இப்பிரதேச மக்களின் குழந்தைகளுக்காக
ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் நாமத்தை பாதுகாக்க
வேண்டியவர்களின் கட்டாயக் கடமையாகும்.
0 comments:
Post a Comment